ஏடிஎம்மில் கள்ளநோட்டு: புதிய சட்டம் கொண்டு வர ரிசர்வ் வங்கி முயற்சி

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+ Comments Mail

குவாஹாத்தி: ஏடிஎம் மெஷின்களில் இருந்து கள்ள நோட்டு வந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட வங்கிகள் பொறுப்பேற்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யவிருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குனர்கள் குழு கூட்டம் நடந்தது. இதில் மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தற்போது உள்ள சட்டப்படி யார் கையில் கள்ளநோட்டு உள்ளதோ அவர்கள் தான் அதற்கு பொறுப்பு ஆகும். இந்த சட்டத்தை மாற்ற அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஏடிஎம் மெஷின்களில் இருந்து கள்ளநோட்டுகள் வருவதாக வங்கிகளுக்கு புகார்கள் வந்து குவிகின்றன. ஏடிஎம் மெஷினில் இருந்து கள்ளநோட்டு வந்தாலும் அதை வங்கி பறிமுதல் செய்வதால் வாடிக்கையாளருக்கு தான் நஷ்டம். இது போன்ற சூழ்நிலையில் வாடிக்கையாளர்கள் மீது கருணை காட்டுமாறு வங்கி மேனேஜர்களை கேட்டுக் கொண்டுள்ளோம்.

ஏடிஎம் மெஷினில் பணத்தை போடும் முன்பு அவை நல்ல நோட்டா கள்ள நோட்டா என்பதை வங்கிகள் கண்டறிய வேண்டும் என்றார்.

கடந்த 2011-2012ம் ஆண்டில் வெவ்வேறு மதிப்புள்ள 5.21 லட்சம் கள்ள நோட்டுகளை மத்திய வங்கி கண்டுபிடித்துள்ளது. தற்போதுள்ள சட்டப்படி கள்ளநோட்டு கண்டுபிடிக்கப்பட்டால் அது குறித்து உடனே போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.

இது போன்ற கள்ளநோட்டு விவகாரங்களை விசாரிக்க மாவட்டம் தோறும் ஒருங்கிணைந்த காவல் நிலையங்கள் அமைக்க மாநில அரசுகளுடன் மத்திய அரசின் துணையோடு ரிசர்வ் வங்கி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வங்கி கிளைகள் அல்லது கருவூல அலுவலகங்களில் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

English summary
Reserve Bank of India wants to change the law that makes the holder of the counterfeit currency as responsible for it. "We are negotiating with the government for reviewing and changing the law," said RBI governor D. Subbarao.
Please Wait while comments are loading...
Your Fashion Voice

Videos

Advertisement
Content will resume after advertisement