For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

1 மணிநேரத்திற்கு 12 நிமிடம் மட்டுமே விளம்பரம்… கட்டண டிவி சேனல்களுக்கு டிராய் கட்டுப்பாடு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எதுவாக இருந்தாலும் ஒரு மணிநேரத்திற்கு 12 நிமிடம் மட்டுமே விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உத்தரவிட்டுள்ளது.

டிவிக்களில் சினிமாவோ, சீரியலோ பார்க்க அமர்ந்தால் போதும் விளம்பரங்களின் தொல்லை தாங்க முடியாது. 7முதல் 10 நிமிடத்திற்கு ஒருமுறை விளம்பரத்தை போட்டு தாளித்து விடுவார்கள். விளம்பரங்களின் மூலம் கோடிக்கணக்கில் காசு பார்க்கும் தனியார் சேனல்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது டிராய் இந்த அறிவிப்புக்கு தனியார் சேனல்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

பல ஆயிரம் கோடி வருமானம்

இந்தியாவில் மொத்தம், 163 கட்டண சேனல்கள் இயங்கி வருகின்றன. இது தவிர இலவச சேனல்களும் இந்தியாவில் நூற்றுக்கணக்கில் பெருகியுள்ளன.

கட்டண சேனல்கள், விளம்பரங்கள் மூலமாக, 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகின்றன. இதுதவிர, சந்தா மூலமாகவும், 21 ஆயிரத்து 300 கோடி ரூபாய் வருமானம் பெறுகின்றன. ஆனால், ஒளிபரப்பு விஷயத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, சந்தா வருமானத்தை விட, விளம்பரங்கள் மூலமாகவே அதிக வருமானங்களை, கட்டண சேனல்கள் ஈட்ட முயற்சிக்கின்றன.

கட்டண சேனல்களுக்கு கட்டுப்பாடு

எனவே விளம்பர விஷயத்தில் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக ஒரு கருத்துருவை, டிராய் உருவாக்கியுள்ளது. இதன்படி, கட்டண சேனல்களில் விளம்பரங்களை ஒளிபரப்புவதில் சில கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த கட்டண சேனல்களில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்போது, ஒரு மணி நேரத்தில் 12 நிமிடங்கள் விளம்பரங்கள் ஒளிபரப்ப வேண்டும் என டிராய் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. விளம்பரங்கள் ஒளிபரப்பும் நிமிடம் குறைவதால் சந்தாதாரர்கள் எவ்வித தடையுமின்றி, நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும்.

விளம்பர இடைவெளியிலும் கட்டுப்பாடு

விளம்பரங்கள் ஒளிபரப்பாகும் நேரத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், நிகழ்ச்சிகளின் போது விளம்பரம் ஒளிபரப்புவதற்காக விடப்படும் இடைவெளி குறித்த விஷயத்திலும் கட்டுப்பாடு கொண்டுவரவும், டிராய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் 7 நிமிடத்திற்கு ஒரு பிரேக் என்ற வகையில் விளம்பர இடைவெளி விடப்படுகிறது என்பதுதான் பார்வையாளர்களின் புகார்.

கட்டண சேனல்கள் எதிர்ப்பு

டிராயின் இந்த திட்டத்துக்கு, கட்டண "டிவி' சேனல்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சோனி பொழுதுபோக்கு சேனல் குழுமத்தின் தலைவர் ரோஹித் குப்தா கூறியதாவது: "டிவி' சேனல்கள், தங்களின் வருமானத்துக்கு பெரும்பாலும், விளம்பரங்களைத் தான் நம்பியுள்ளன. இதை எப்படி குறைக்க முடியும் என்று கேட்டுள்ளார் குப்தா.

நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கருத்து

ஆஷிஷ் பெர்வானி என்பவர் கூறுகையில், ""பார்வையாளர்கள் விரும்பிப் பார்க்கக்கூடிய நிகழ்ச்சிகளை, ஒரு சிறிய பகுதியை தயாரிப்பதற்கே, 1.5 கோடி ரூபாய் செலவாகிறது. விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதித்தால், எப்படி நிகழ்ச்சிகளை தரமாக தயாரிக்க முடியும். நிகழ்ச்சிகளை தரமாகவும், துல்லியமாகவும் தயாரிக்க வேண்டும் என்ற டிராயின் நோக்கத்துக்கே, இது எதிராக உள்ளது,'' என்றார்.

கட்டணம் உயரும்

"இதுபோன்ற கட்டுப்பாடுகள் மூலம், விளம்பர கட்டணங்களை மேலும் உயர்த்த வேண்டியிருக்கும். மிகப் பெரிய நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் சூழ்நிலைக்கும் வழிவகுக்கும். ஆனாலும், டிராயின் இந்த திட்டம், தற்போது விவாத நிலையில் தான் உள்ளது. எனவே, இந்த திட்டத்தில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகின்றன தொலைக்காட்சி நிறுவனங்கள்.

English summary
The Telecom Regulatory Authority of India (Trai) on Friday (22nd March) notified regulations afresh restricting advertising time on television channels to 12 minutes per hour, unleashing a storm of protest by broadcasters who said the curb would hurt them economically. The regulator said in a release that the channels will now have to inform it of the volume of advertising they carry on a quarterly basis following the notification of the Standard of Quality of Service (Duration of Advertisements in Television Channels) Amendment Regulations, 2013. News broadcasters condemned the move and requested to re consider.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X