பப்புவா நியூகுனியாவில் சூனியக்காரி என்ற சந்தேகத்தில் 2 பெண்கள் தலை துண்டித்து கொலை

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

பப்புவா நியூகுனியாவில் சூனியக்காரி என்ற சந்தேகத்தில் 2 பெண்கள் தலை துண்டித்து கொலை
சிட்னி: சூனியக்காரியாக இருப்பார்களோ என்ற சந்தேகத்தில் ஆஸ்திரேலியா அருகே உள்ள பப்புவா நியூகுனியா தீவில் போலேல் கிராமத்தில் 2 பெண்கள் தலை துண்டித்து கொலை செய்யப் பட்டுள்ளனர்.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் நாடு, பப்புவா நியூகுனியா. இந்நாட்டில் பேய், பிசாசு மற்றும் மூட நம்பிக்கைகள் தொடர்பான உயிர் கொலைகள் ஏராளமாக நிகழ்ந்து வருகின்றன.

பிறந்த சிசுவை தின்ற தகப்பன்...

கடந்த 2011ம் ஆண்டு, பிறந்த ஆண் சிசுவை அவரது தந்தை துடிதுடிக்க கடித்து தின்ற சம்பவம் நாகரிக சமுதாயத்தை திகிலுக்குள் ஆழ்த்தியது.

நிர்வாண அவலம்...

இந்த திகில் விலகும் முன்னரே கடந்த மாதம், சூனியக்காரி என்ற சந்தேகத்தில் ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி எரித்த சம்பவம் நடந்தது.

சூனியக்காரிகள்...

இதனையடுத்து, சூனியம் வைத்து ஓய்வு பெற்ற ஆசிரியையை கொன்று விட்டதாக கூறி 2 பெண்களை கடந்த வாரம் போலேல் கிராமவாசிகள் பிடித்துச் சென்றனர்.

கொடுமை படுத்திக் கொலை...

அவர்களை 3 நாட்கள் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தி, 2 பேரின் தலையையும் துண்டித்து கிராம மக்கள் நேற்று படுகொலை செய்தனர்.

போலீஸ் முன்னரே கொடூரம்...

போலீசாரின் முன்னிலையிலேயே இந்த கோரச் சம்பவம் நடந்திருப்பது மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Two elderly women were beheaded in Papua New Guinea after being tortured for three days, a report said Monday, the latest in a string of sorcery-related crimes.
Write a Comment
AIFW autumn winter 2015