For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'மிஸ் கூவாகமாக' சாயா சிங் தேர்வு.. 2வது இடம் அனுஷ்காவுக்கு!

By Chakra
Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது.

மிஸ் கூவாகம்- படங்கள்

விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் நல சங்கம்...

விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் நல சங்கம்...

இதையொட்டி விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் நல சங்கம், தர்ம ரக்ஷன சமிதி சார்பில் மிஸ் கூவாகம் என்ற அழகிப் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

கலெக்டர் சம்பத்...

கலெக்டர் சம்பத்...

நேற்றிரவு விழுப்புரத்தில் நடந்த இந்தப் போட்டியில் 60 பேர் கலந்து கொண்டனர். அரவாணிகள் நலச் சங்கத் தலைவி ராதா தலைமை தாங்கினார். கலெக்டர் சம்பத் மிஸ் கூவாகம் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

உடை அலங்காரப் போட்டி...

உடை அலங்காரப் போட்டி...

உடை அலங்காரப் போட்டி, நடைப் போட்டி என பல்வேறு போட்டிகள் அவர்களுக்கு நடத்தப்பட்டன.

இறுதிச் சுற்றுக்கு 10 பேர் தேர்வாயினர். அவர்களிடம் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு சிறப்பாகப் பதில் கூறிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தர்மபுரியைச் சேர்ந்த சாயாசிங்

தர்மபுரியைச் சேர்ந்த சாயாசிங்

இதில் தர்மபுரியைச் சேர்ந்த சாயாசிங் முதலிடத்தை பிடித்து மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பிரபல பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் கிரீடம் சூட்டி பரிசு வழங்கினார்.

ஆந்திராவைச் சேர்ந்த அனுஷ்கா

ஆந்திராவைச் சேர்ந்த அனுஷ்கா

ஆந்திராவைச் சேர்ந்த அனுஷ்கா 2-வது இடத்தையும் இடத்தையும் பிடித்தார்.

சென்னையைச் சேர்ந்த தீபிகா..

சென்னையைச் சேர்ந்த தீபிகா..

சென்னையைச் சேர்ந்த தீபிகா 3-வது இடத்தைப் பிடித்தார். இவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பத், எஸ்.பி மனோகரன், நகரசபை தலைவர் பாஸ்கரன் ஆகியோர் கிரீடம் சூட்டி பரிசுகள் வழங்கினர்.

ஹீரோயின் வாய்ப்பு வேண்டும்...

ஹீரோயின் வாய்ப்பு வேண்டும்...

மிஸ் கூவாகம் பட்டம் வென்ற சாயாசிங் கூறுகையில், சினிமாவில் கதாநாயகியாக நடிக்கின்ற வாய்ப்பை திருநங்கைகளுக்கு கொடுக்க வேண்டும். எங்களுக்கும் திறமை இருக்கின்றது. வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்கித் தர வேண்டும் என்றார்.

English summary
Of the 62 hopefuls who participated in the Miss Koovagam beauty pageant, Chaya Singh from Dharmapuri emerged as the winner. Anuska from Andhra Pradesh and Chennai-resident Deepika came in the second and third places respectively.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X