செக்ஸ் டார்டச்சர் கொடுத்தார்... 74 வயது சேலம் ரவுடி குறித்து பெண் பரபரப்புப் பேட்டி

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

சேலம்: தனக்கு சேலம் ரவுடி கூழ் ரங்கநாதன் தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். இதனால் மனம் உடைந்து நான்தற்கொலைக்கு முயன்றேன என்று கூறியுள்ளார் சேலத்தைச் சேர்ந்த அப்சரா பானு என்ற பெண்.

சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் கூழ் ரங்கநாதன் என்று அழைக்கப்படும் ரங்கநாதன். இவர் ஒரு காலத்தில் பயங்கர ரவுடியாம். ஆனால் பின்னர் ரவுடித்தனத்தை விட்டு விட்டு ரியல் எஸ்டேட் தொழிலுக்கு மாறினார். இந்த நிலையில் 74வயதான ரங்கநாதன் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் போட்டுச் சென்றனர் கொலையாளிகள். இந்த கொலை வழக்கில், கிச்சிப்பாளையம் பாத்திமா நகரைச் சேர்ந்த பாட்ஷா, அவரது நண்பர்களான குமரேசன், உதயக்குமார், பூவரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

போலீஸாரின் விசாரணையின்போது பாட்ஷாவின் தாயார் அப்சரா பானுவுக்கும், தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகம் வந்தது. இதையடுத்து அப்சரா பானுவிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்குப் பின்னர் நேற்று விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றார் பானு. உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அப்சரா பானு கூறுகையில்,

நான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாய்க்கால் பட்டறை பகுதியில் சில்லி கடை வைத்து நடத்தி வந்தேன். அங்கேயே தனியாக வீடு எடுத்து தங்கி இந்த கடையை நடத்தி வந்தேன். அப்போது அடிக்கடி கூழ் ரங்கநாதன் என் கடைக்கு வருவார். நீண்ட நேரம் கடையிலேயே இருப்பார்.

அப்போது திடீரென ஒரு நாள் கூழ் ரங்கநாதன் என்னிடம், நீ ஏன் கஷ்டப்படுகிறாய், உனக்கு ரூ. 2 லட்சம் பணம் தருகிறேன். மேலும் தனியாக வீடும் எடுத்து கொடுக்கிறேன் என்றார். அதற்கு நான் ரூ. 2 லட்சம் என்னால் திருப்பி கொடுக்க முடியாது வேண்டாம் என்றேன்.

ஆனால் அவர் பணத்தை திருப்பி தரவேண்டாம் என்று கூறி உன்னை எனக்கு பிடித்திருக்கிறது எனவே தனியாக உனக்கு வீடு எடுத்து தருகிறேன். நான் அவ்வப்போது வந்து செல்கிறேன் என்றார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் இதுபற்றி ஜெயிலில் உள்ள என் மகனுக்கும், என் தம்பிகளுக்கும் தெரிந்தால் அவர்களுக்கு உங்கள் மீது கோபம் ஏற்படும். எனவே சென்று விடுங்கள். நான் உங்கள் பேத்தி மாதிரி என்றேன்.

அதற்கு கூழ் ரங்கநாதன் நானும் ரவுடிதான், பொன்னம்மாபேட்டை வரதனை கொலை செய்தவன். எனக்கும் கோபம் வரும். என்னை எவனாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றார். இதையடுத்து நான் அங்கிருந்து மீண்டும் கிச்சிப்பாளையம் ஒந்தாப்பிள்ளை காடு பகுதியில் உள்ள என் வீட்டிற்கே வந்து விட்டேன்.

இந்நிலையில் தொடர்ந்து கூழ் ரங்கநாதன் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். இதுப்பற்றி தெரியவந்ததும் என் மகன் அவரை எச்சரித்தான். ஆனாலும் அவர் தொடர்ந்து இந்த காரியத்தை செய்தார். நான் வாய்க்கால் பட்டறையில் இருந்து கிச்சிப்பாளையம் பகுதிக்கு வந்ததும் என் தங்கை காமியாபானுவை சந்தித்த கூழ் ரங்கநாதன் உன் அக்கா எங்கே என்று வீட்டை கண்டுபிடித்தார்.

இதையடுத்து நான் என் தங்கையை ஏன் அவரிடம் வீட்டை சொன்னாய் என்று கேட்டேன். வழக்கமாக நான் வெளியில் சென்றால் வீட்டை பூட்ட மாட்டேன். தாழ் மட்டும் தான் போடுவேன். அதே போல் தான் சம்பவத்தன்றும் நான் வீட்டை தாழ் போட்டு விட்டு சென்றேன். அன்று கூழ் ரங்கநாதன் வீட்டிற்கு வந்து இருக்கிறார்.

அதற்கு பின்னால் போலீசார் வந்து அவர் கொலை செய்யப்பட்டார் என்று சொன்னதுக்கு பின்னர் தான் எனக்கு இந்த விபரம் தெரியவரும். ஆனால் அவருடன் நான் பேசிய குற்றத்துக்கே அவருடன் எனக்கு கள்ளத் தொடர்பு இருந்தது என்று கூறி கொச்சைப்படுத்துகிறார்கள். அவர் பணம் கொடுத்தும் என்னை அழைத்தும் நான் மறுத்து விட்டேன்.

அப்படி இருக்கும் போது எனக்கு எப்படி அவருடன் தொடர்பு இருக்கும்? தற்போது விஷ இலையை சாப்பிட்டு இருக்கிறேன். தொடர்ந்து இதே போல் தகவல் பரப்பினால் நான் மீண்டும் தற்கொலை செய்து கொள்வேன் என்றார்.

English summary
A Salem woman attempted for suicide after rumour spreadded on her, linking with a murdered rowdy.
Write a Comment
AIFW autumn winter 2015