ரமலான் நோன்பு: இனி இப்தார் விருந்தில் பிட்ஸா, பர்கர் மற்றும் கேக்கும் கிடைக்கும்..!

உங்களது ரேட்டிங்:

லக்னோ: பொதுவாக இப்தார் விருந்தில் பருப்பு, கொண்டைக்கடலை மற்றும் கஞ்சி போன்ரவை இடம் பெறும். ஆனால், லக்னோவில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று இம்முறை விருந்தில் புதிதாக பீட்ஸா, பர்கர் மற்றும் கேக்குகளைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது.

சென்ற வாரம் ரமலான் நோன்பு துவங்கியது. பகல் வேளையில் நோன்பு மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள், நோன்பு முடிக்கும் வேளையில் பொதுவாக பருப்பு, கஞ்சி போன்ற உணவௌகளை எடுத்துக் கொள்வது வழக்கம்.

ஆனால் புதுமையாக லக்னோவில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்று இவ்வருடம் நோன்பு விடுபவர்களுக்கு வித்தியாசமான விருந்தளிக்க முடிவு செய்துள்ளது.

புதுமையான இப்தார்...

லக்னோவில் உள்ளது ஹூசைனாபாத் தொண்டு நிறுவனம். நோன்பிருக்கும் இஸ்லாமியர்களுக்கு வித்தியாசமான விருந்தளிக்க திட்டமிட்ட இந்நிறுவனம், இப்தார் விருந்தில் ஒரு புதுமையைப் புகுத்தியுள்ளது.

இப்தார் விருந்தில் பீட்ஸா...

அதன் படி, வித்தியாசமான சுவைகள் கொண்ட பீட்சா, பர்கர், கேக் போன்றவைகளை இம்முறை இப்தார் விருந்தில் பரிமாற இருப்பதாக இத்தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிதியுதவி அதிகரிப்பு...

மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு விருந்திற்கான நிதி உதவி ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்பட்டதால் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ மசூதிகள்...

பீட்ஸா, பர்கர் மற்றும் கேக் விருந்து லக்னோவில் உள்ள 12 மசூதிகளிலும் அனைத்து நோன்பு பிரிவினருக்கும் ஒரே நாளிலோ அல்லது ஒவ்வொரு மசூதியிலும் ஒவ்வொரு நாளாகவோ அளிக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

வித்தியாச இப்தார் விருந்து...

இந்த வித்தியாசமான இப்தார் விருந்தில் ஒவ்வொரு மசூதியில் இருந்தும் மொத்தம் 1000 முதல் 1500 பேர் இடம் பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
The Lucknow-based Hussainabad Trust has decided to revisit and revamp the iftaar menu, to enable the rozedaars (people observing the Ramzan fast) enjoy a wide variety of eatables during the holy month. According to office bearers of Royal Family of Awadh, pizzas and burgers will find a place on their iftaar platter.
Please Wait while comments are loading...
2016 Tamil Nadu Election

Videos