For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரூர் பார் கவுன்சில் தேர்தல் - செந்தில் பாலாஜி எதிர் கோஷ்டியின் மாரப்பன் வெற்றி

By Prabhakaran
Google Oneindia Tamil News

Minister backed team loses in Karur Bar council election
கரூர்: கரூர் பார் கவுன்சில் தேர்தலில், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் எதிர் கோஷ்டியைச் சேர்ந்த மாரப்பன் அணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

கரூர் மாவட்ட பார் கவுன்சில் தேர்தல் ஆகஸ்ட் 7 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்படது. இது வரை வழக்கறிஞர்கள் மட்டுமே களத்தில் இறங்கி மோதி வந்த பார்கவுன்சில் தேர்தல், முதன் முறையாக அரசியல் நுழைந்தது.

இந்தத் தேர்தல் ஆண்டுதோறும் நடைபெறும். அதில் ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், ஒரு இணைச் செயலாளர், இரண்டு துணைத் தலைவர்கள் என தேர்வு செய்யப்படுவது வழக்கமாகும்.

இந்த முறை, தற்போது, தலைவராக உள்ள மாரப்பன் அணியில், தலைவர் பதவிக்கு மாரப்பனும், செயலாளர் பதவிக்கு செந்தில் குமாரும், துணை தலைவர் பதவிக்கு தனசேகரன், சம்பத் ஆகியோரும், துணை செயலாளப் பதவிக்கு ஆரோக்கியசாமியும், பொருளாளர் பதவிக்கு பரசுராமனும் போட்டியிட்டனர்.

இதே போல, ஜெகநாதன் கோஷ்டியில், தலைவர் பதவிக்கு ஜெகநாதனும், செயலாளர் பதவிக்கு நெடுஞ்செழியனும், துணைத் தலைவர் பதவிக்கு தமிழ்வாணன், ஆறுமுகம் ஆகியோரும், இணைச் செயலாளர் பதவிக்கு நந்தகுமாரும், பொருளாளர் பதவிக்கு சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் ஆவர். இதனால் போட்டி பரபரப்பாக இருந்தது.

தேர்தலில் மொத்தம் உள்ள 443 வாக்குகளில் 433 வாக்குகள் பதிவானது. இரவு 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மாரப்பன் 258 வாக்குகளும், செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட செந்தில்குமார் 227 வக்குகளும், துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சம்பத் 215 வாக்குகளும், தமிழ்வாணன் 224 வாக்குகளும் , பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சரவணன் 199 வாக்குகளும், இணைச் செயலாளர் பதவிக்கு போட்யிடியிட்ட நந்தகுமார் 234 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியையும், அவரது ஆதரவாளர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

English summary
Minister Senthil Balaji backed team has lost in the Karur Bar council election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X