For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பறிபோனது கிங்பிஷர் நிறுவனத்தின் மும்பை ஹவுஸ்! கோவா ஹவுஸூம் பறிபோகிறது!!

By Mathi
Google Oneindia Tamil News

Kingfisher loses prime asset
மும்பை: கிங்பிஷர் ஏர்லைன்ஸுக்கு கடன் கொடுத்த வங்கிகள் தற்போது அந்த நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடங்களை கையகப்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக மும்பை விமான நிலையம் அருகே கிங்பிஷர் ஏர்லைன்ஸின் தலைமையகம் செயல்பட்டு வந்த கட்டிடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

கிங்பிஷர் நிறுவனத்துக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரூ1,600 கோடியும் பிஎன்பி வங்கி ரூ800 கோடியும் ஐடிபிஐ வங்கி ரூ800 கோடியும் கடன் கொடுத்துள்ளன. இந்தக் கடனை திருப்பி செலுத்தாதால் அந்த நிறுவனத்தின் கட்டிடங்களை கையகப்படுத்தி விற்பனை செய்ய வங்கிகள் முடிவு செய்துள்ளன.

தற்போது மும்பை ஹவுஸ் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து கோவாவில் உள்ள மற்றொரு கட்டிடமும் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இவற்றை விற்பனை செய்து தங்களது கடன் தொகையை வசூலித்துக் கொள்ள வங்கிகள் திட்டமிட்டுள்ளன.

English summary
The lenders of Kingfisher Airlines have taken possession of Kingfisher House in suburban Mumbai, stepping up their efforts to recover their dues from the beleaguered Vijay Mallya-owned carrier.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X