உணவு பாதுகாப்பு மசோதாவில் திமுகவின் திருத்தங்கள் ஏற்பதாக ஒப்புதல்- டி.ஆர் .பாலு திருப்தி!

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+ Comments Mail

Govt. accepts amendments in Food Bill: TR Balu
டெல்லி: உணவு பாதுகாப்பு மசோதாவில் திமுக முன்வைத்த திருத்தங்களை ஏற்பதாக மத்திய அரசு ஏற்றுக் கொண்டது திருப்தி அளிக்கிறது என்று டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் உணவு பாதுகாப்பு மசோதா மீதான விவாதத்தின் மீது பேசிய டி.ஆர். பாலு, இந்த மசோதா மீதான திருத்தங்கள் அவசியம் என்று உணவு பாதுகாப்பு அமைச்சரிடம் நேரில் தெரிவித்தோம். என்னென்ன திருத்தங்கள் என்பது குறித்தும் அவரிடம் நாங்கள் விளக்கினோம்.

திமுக முன்வைத்த திருத்தங்களை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது திருப்தி அளிக்கிறது என்றார்.

முன்னதாக இம்மசோதா மீது பேசிய சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம்சிங், உணவு பாதுகாப்பு திட்டத்தை நிறைவேற்றும் முன்பாக அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இது அவசர கதியில் தேர்தலுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் ஏழைகளுக்கு என எதுவும் இல்லை என்றார்.

ஆனால் ஐக்கிய ஜனதா தளத்தின் சரத்யாதவோ, மத்திய அரசின் உறுதியான நடவடிககி என்று பாராட்டியதுடன் சில சந்தேகங்களையும் எழுப்பினார்.

இதனிடையே நடப்புய் கூட்டத் தொடரை செப்டம்பர் 6-ந் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

English summary
DMK Senior Leader TR Balu said in Parliament, centre govt accepted his party's amendments for the Food bill.
Please Wait while comments are loading...
Your Fashion Voice

Videos

Advertisement
Content will resume after advertisement