For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு அதிக சம்பளம் தரும் 15 நிறுவனங்கள்

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு அதிகம் சம்பளம் வழங்கும் 15 நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கிளாஸ்டோர் என்ற நெட்வொர்க்கிங் இணையதளம் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு அதிகம் சம்பளம் கொடுக்கும் 15 நிறுவனங்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த இடத்தில் உள்ளன என்று பார்ப்போம்.

ஜுனிபர்

ஜுனிபர்

நெட்வொர்க் உபகரணங்கள் தயாரிப்பாளரான ஜுனிபர் நெட்வொர்க்ஸ் தனது சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு அதிகம் சம்பளம் கொடுக்கும் நிறுவனம் ஆகும்.

18 Jobs available in Juniper

லிங்க்ட் இன்

லிங்க்ட் இன்

புரபஷனல்களுக்கு உதவியாக உள்ளது லிங்க்ட் இன் இணையதளம். இந்நிலையில் லிங்க்ட் இன் தனது சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு அதிகம் சம்பளம் கொடுக்கும் நிறுவன பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

19 Jobs available in Linkedin

யாஹு

யாஹு

சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் நிறுவன பட்டியலில் லிங்க்ட் இன்னை அடுத்து யாஹு உள்ளது. யாஹு நிறுவன சாப்ட்வேர் என்ஜினியர்களின் வருடாந்திர அடிப்படை சம்பளம் ரூ. 81 லட்சத்து 17 ஆயிரத்து 899 ஆகும்.

108 Jobs available in Yahoo

கூகுள்

கூகுள்

யாஹுவை அடுத்து கூகுள் நிறுவனம் தனது சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறது. அந்நிறுவன சாப்ட்வேர் என்ஜினியர்களின்
வருடாந்திர அடிப்படை சம்பளம் ரூ. 79 லட்சத்து 20 ஆயிரத்து 565 ஆகும்.

868 Jobs available in Google

ட்விட்டர்

ட்விட்டர்

ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் என்ஜினியர்களின் வருடாந்திர அடிப்படை சம்பளம் ரூ. 77 லட்சத்து 79 ஆயிரத்து 377 ஆகும்.

173 Jobs available in Twitter

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் நிறுவன சாப்ட்வேர் என்ஜினியர்களின் வருடாந்திர அடிப்படை சம்பளம் ரூ. 77 லட்சத்து 64 ஆயிரத்து 860 ஆகும்.

ஆரக்கிள்

ஆரக்கிள்

ஆரக்கிள் நிறுவன சாப்ட்வேர் என்ஜினியர்கள் வருடாந்திர அடிப்படை சம்பளமாக ரூ.76 லட்சத்து 56 ஆயிரத்து 778 பெறுகிறார்கள்.

22 Jobs available in Oracle

வால்மார்ட்

வால்மார்ட்

இந்தியாவுக்குள் நுழைய நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் வால்மார்ட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சாப்ட்வேர் என்ஜினியர்கள் ரூ. 76 லட்சத்து 7 ஆயிரத்து 251 வருடாந்திர அடிப்படை சம்பளமாக பெறுகிறார்கள்.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

மார்க் ஜக்கர்பர்கின் நிறுவனமான ஃபேஸ்புக் சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு ரூ. 75 லட்சத்து 71 ஆயிரத்து 381 வருடாந்திர அடிப்படை சம்பளமாக அளிக்கிறது.

13 Jobs available in Facebook

இன்டெக்ரல்

இன்டெக்ரல்

இன்டெக்ரல் நிறுவன சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு ரூ. 73 லட்சத்து 48 ஆயிரத்து 985 வருடாந்திர அடிப்படை சம்பளமாக கிடைக்கிறது.

அரிஸ்டா

அரிஸ்டா

அரிஸ்டா நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் என்ஜினியர்கள் ரூ. 72 லட்சத்து 35 ஆயிரத்து 572 வருடாந்திர அடிப்படை சம்பளமாக பெறுகிறார்கள்.

34 jobs available in Arista

என்விடியா

என்விடியா

என்விடியா நிறுவன சாப்ட்வேர் என்ஜினியர்கள் ரூ. 72 லட்சத்து 7 ஆயிரத்து 25 வருடாந்திர அடிப்படை சம்பளமாக வாங்குகிறார்கள்.

215 Jobs available in nvidia

இ பே

இ பே

முன்னணி ஏல இணையதள நிறுவனமான இ பேயின் சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு ரூ. 71 லட்சத்து 48 ஆயிரத்து 924 வருடாந்திர அடிப்படை சம்பளமாக கிடைக்கிறது.

501 Jobs available in ebay

அமேசான்

அமேசான்

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் வேலை பார்க்கும் சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு ரூ. 69 லட்சத்து 10 ஆயிரத்து 177 வருடாந்திர அடிப்படை சம்பளமாக கிடைக்கிறது.

204 Jobs available in Amazon

ஹெச்பி

ஹெச்பி

ஹ்யூலெட் பாக்கார்ட்(ஹெச்பி) நிறுவனம் தனது சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு ரூ.68 லட்சத்து 85 ஆயிரத்து192 வருடாந்திர அடிப்படை சம்பளமாக வழங்குகிறது.

262 Jobs available in HP

English summary
Above is the list of 15 companies that pay well for the software engineers in the US.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X