For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜிஎஸ்டி மத்திய அரசுக்கு முதல் மாத வசூல் ரூ. 42ஆயிரம் கோடி

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பின்னர் ஜூலை மாதத்தில் மட்டும் ரூ. 42 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுவதும் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியால் ஜூலை மாதத்தில் மட்டும் ரூ. 42ஆயிரம் கோடி வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு இதே ஜூலை மாதத்தில் ஆயர்தீர்வையாக ( excise duty)ரூ. 31,782 கோடி வசூலானது. சேவை வரியாக 19,600 கோடி வசூலானது.

நடப்பாண்டு ஜூலை மாதத்தில் முதல்நாள் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டது. ஜூலை, மாதத்துக்கான ஜிஎஸ்டிஆர் 3பி படிவம் ஆகஸ்ட் மாதம் 25ந் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என அரசு அறிவித்தது.

ரூ. 42000 கோடி

ரூ. 42000 கோடி

கடந்த வாரத்தில் இருந்து ஜி.எஸ்.டி. வரி ரிட்டனை தொழிற்சாலைகள், வர்த்தகர்கள், நிறுவனங்கள் செலுத்தி வருகின்றன. இதில் இப்போது வரை முதல் மாதத்தில் 42 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த வரி

ஒருங்கிணைந்த வரி

ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரி(IGST)வரி மூலம், ரூ. 15 ஆயிரம் கோடியும், புகையிலை உள்ளிட்ட உடல் நலக்கேடு விளைவிக்கும் பொருட்களில் இருந்து ரூ. 5ஆயிரம் கோடியும் வரி வசூலாகியுள்ளது.

Recommended Video

    What is GST | Basics of GST in Tamil-Oneindia Tamil
    ரிட்டன தாக்கல்

    ரிட்டன தாக்கல்

    மத்திய ஜி.எஸ்.டி., மாநில ஜி.எஸ்.டி வரியாக ரூ.22 ஆயிரம்கோடி வரியாக வந்துள்ளது. தற்போது வரை 10லட்சம் பேர் வரிசெலுத்துபவர்கள் ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். மேலும், 20 லட்சம் பேர் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும்.

    எங்கள் கணக்குப்படி, 95 சதவீதம்பேர் ரிட்டன் தாக்கல் செய்துவிடுவார்கள் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

    50 லட்சம் பேர்

    50 லட்சம் பேர்

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆயத்தீர்வையாக ரூ.31 ஆயிரத்து 782 கோடியும், சேவை வரியாக ரூ.19 ஆயிரத்து 600 கோடியும் வசூலானது. இந்த ஆண்டு ஜி.எஸ்.டி. வரியோடு, மாநில அரசுகளின் வரியும் சேர்க்கப்படும் பட்சத்தில் வரிவசூல் அதிகரிக்கும். மேலும், 72 லட்சம் வரி செலுத்துபவர்களில் 50 லட்சம் பேர் ஜி.எஸ்.டி.க்கு மாறிவிட்டனர்.

    ஜிஎஸ்டிஆர் 3பி படிவம்

    ஜிஎஸ்டிஆர் 3பி படிவம்

    15 லட்சம் பேர் புதிதாக பதிவு செய்துள்ளனர், ஒட்டுமொத்தமாக கணக்கிடும்போது, ஜூலை மாதத்தில் 60 லட்சம் பேர் ஜிஎஸ்டிஆர் 3பி படிவம் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அபராதம் வசூல்

    அபராதம் வசூல்

    மேலும், குறிப்பிட்ட தேதிக்குள் வரி செலுத்தாமல் இருக்கும் வர்த்தகர்கள், தொழில்நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 அபராதமும், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டு ஜூலை மாதம் சுங்க வரி ரூ. 30000 கோடி வசூலாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    Within the first month of the GST being introduced as much as Rs 42,000 crore has come in taxes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X