For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜிஎஸ்டிஎன் இணையதளம் தயார்- ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தை தாக்கல் செய்யலாம்

ஜிஎஸ்டிஎன் இணையதளம் தயாராகி பயன்பாட்டுக்கு வந்து விட்டது. தொழில் நிறுவனங்கள் தங்களின் மாதாந்திர ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தை எந்த நேரத்திலும் செலுத்தலாம்.

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: ஜிஎஸ்டிஎன் இணையதளம் தயாராகி விட்டதால் தொழில் நிறுவனங்கள் தங்களின் ஜூலை மாதத்திய மாதாந்திர படிவத்தையும் வரியையும் ஜிஎஸ்டிஎன் இணையதளத்தின் மூலம் செலுத்தலாம்.

ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரியானது கடந்த ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது. இருந்தாலும் ஜிஎஸ்டி வரிமுறையில் மாதாந்திர படிவங்களை செலுத்துவதற்கான இணையதளம் அப்போது தயாராகவில்லை.

அனைத்து பயன்பாடுகளையும் உள்ளடக்கிய முழுமையான ஜிஎஸ்டிஎன் இணையதளம் ஜூலை 24ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று மத்திய நிதி அமைச்சர் அருன் ஜெட்லி அப்போது கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே அனைத்து படிவங்களையும் உள்ளடக்கிய ஜிஎஸ்டிஎன் இணைய தளம் கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

ஜிஎஸ்டிஎன் இணையதளம்

ஜிஎஸ்டிஎன் இணையதளம்

தற்போது ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் கொள்முதல், விற்பனை, சேவை வருவாய் மற்றும் ஜிஎஸ்டி வரிகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஜிஎஸ்டிஆர்-3பி(GSTR-3B) படிவம் முழுமையாக தயாராகிவிட்டது.

மாதாந்திர படிவம்

மாதாந்திர படிவம்

தொழில் நிறுவனங்கள் தங்களின் மாதாந்திர ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தை எந்த நேரத்திலும் செலுத்தலாம். மேலும் அதற்கான வரியையும் ஜிஎஸ்டிஎன் இணைய தளத்தின் வழியாக செலுத்திக் கொள்ளலாம் என்று ஜிஎஸ்டிஎன் தலைவர் நவீன் குமார் தெரிவித்தார்.

ஜிஎஸ்டிஎன் இணையதளம்

ஜிஎஸ்டிஎன் இணையதளம்

ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் தொழில்நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்களின் ஜூலை மாதத்திற்கு உரிய சரக்குக் கொள்முதல் மற்றும் விற்பனை பற்றிய விபரங்களையும் அதற்கான வரியையும் ஜிஎஸ்டிஎன் இணையதளத்தின் வழியாக ஒருங்கிணைந்த ஜிஎஸ்டிஆர்-3பி என்ற படிவத்தை பூர்த்தி செய்து செலுத்திக் கொள்ளலாம், மேலும் சேவை நிறுவனங்களும் தங்களின் வருமானத்திற்கு உரிய வரியையும் ஜிஎஸ்டிஎன் இணையதளத்தின் மூலம் செலுத்திக்கொள்ள முடியும்.

வரி செலுத்துபவர்கள்

வரி செலுத்துபவர்கள்

மேலும், வரி செலுத்துபவர்கள் தாங்கள் செலுத்தவேண்டிய மொத்த வரியையும் (Self Assessed Liabilities) உள்ளீட்டு வரி பயன்பாட்டையும் (Input Tax Credit) ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டியது மிக அவசியமாகும்.

ஆகஸ்ட் 20 கடைசி தேதி

ஆகஸ்ட் 20 கடைசி தேதி

ஜூலை மாதத்திற்கான கொள்முதல் மற்றும் விற்பனைக்கான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தை செலுத்துவதற்கான கடைசி தேதி வரும் ஆகஸ்டு 20ம் தேதி ஆகும்.

ஜிஎஸ்டிஆர்-3பி படிவம்

ஜிஎஸ்டிஆர்-3பி படிவம்

அதுபோலவே நடப்பு ஆகஸ்டு மாதத்திற்கான கொள்முதல் மற்றும் விற்பனைக்கான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தை செலுத்துவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 20ம் தேதி என்பதையும் தொழில்நிறுவனங்களும் வர்த்தகர்களும் நினைவில் கொள்ளவேண்டியது அவசியமாகும்.

English summary
Businesses can start filing their first tax return under the new Goods and Services Tax (GST) regime as the GST Network has started the facility for return filing and paying taxes on the portal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X