For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1800 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி 3,000 கோடி அமெரிக்க டாலர மிச்சப்படுத்தப் போகும் கோகோ கோலா!

By Super Admin
Google Oneindia Tamil News

அட்லாண்டா : சர்வதேச அளவில் குளிர்பானங்கள் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள கோகோ கோலா நிறுவனம் 3 கோடி அமெரிக்க டாலர்களை மிச்சம் செய்வதற்காக உலக அளவில் தனது நிறுவனங்களில் பணிபுரியும் 1800 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் இ-மெயிலின் மூலம் அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது சர்வ‌தேச அளவில் கோகோ கோலா விற்பனையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும் கோகோ கோலா தயாரிப்பு விலையும் அதிகரித்துள்ளதன் காரணத்தினால் நிறுவனத்திற்கு சமீபகாலமாக தொடர்‌ந்து இழப்பு ஏற்பட்டு வருகிறது.

Coca-Cola to cut up to 1,800 jobs worldwide

அந்த அறிக்கையில் நிறுவன தலைமை உயர் அதிகாரி முஹ்தார் கென்ட் குறிப்பிட்டுள்ளதாவது நிறுவனம் 3 கோடி அமெரிக்க டாலர்கள் இழப்பை ஈடுகட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது.

அதன் ஒருபகுதியே 1600 முதல் 1800 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பது ஆகும். இது சர்வதேச அளவில் தங்கள் நிறுவன்ததில் பணியாற்றும் ‌மொத்த ஊழியர்களில் 1 சதவீத அளவே ஆகும். இந்த 1800 ஊழியர்களின் பணிநீக்கத்தினால் நிறுவனத்தின் பணிகள் சிறிதளவும் பாதிக்கப்படாது என்று கென்ட் அதில் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 31, 2013 ஆம் தேதிப்படி கோகோ கோலா நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் 130600 பேர் ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Drinks giant Coca-Cola is set to cut up to 1,800 jobs worldwide as it continues cost-cutting efforts. Coca-Cola reported a 14% fall in earnings for the July to September quarter last year and sluggish revenue growth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X