For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடனில் மூழ்கிய கிரீஸ் மீண்டு வருமா?: இன்று நடந்த முக்கிய வாக்கெடுப்பு

By Siva
Google Oneindia Tamil News

ஏதென்ஸ்: கடும் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் கிரீஸ் நாட்டில் ஐரோப்பிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து பொது மக்களிடையே இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

கலை, கலாச்சாரத்திற்கு பெயர் போன ஐரோப்பிய நாடான கிரீஸ் தற்போது கடும் கடன் நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்நாட்டுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு நிதியுதவி அளித்தது. மேலும் கடனில் சிக்கித் தவிப்பதால் சிக்கனமாக இருக்குமாறு அது அறிவுறுத்தியும் கிரீஸ் கேட்கவில்லை. விளைவு கடன் தொல்லை மேலும் அதிகரித்து அதன் நிலைமை மோசமானது.

Emotions run high ahead of Greek vote on EU

கிரீஸ் பன்னாட்டு நிதியத்திடம் பெற்ற கடன் தொகையில் ஒரு தவணையான ரூ.10 ஆயிரத்து 500 கோடியை கடந்த 30ம் தேதிக்குள் செலுத்தத் தவறியது. இதனால் கடனை செலுத்தத் தவறிய முதல் வளர்ந்த நாடு என்ற அவப்பெயர் கிரீஸுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர இரண்டு ஆண்டு அவகாசம் அளிக்குமாறு கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் கோரிக்கை விடுத்தார். மேலும் கூடுதலாக கடனும் கேட்டார். ஆனால் அவரது கோரிக்கைகளை ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு ஏற்க மறுத்துவிட்டது.

கடனை திருப்பி செலுத்த தவறிய நாடு கிரீஸ் என்று ஐரோப்பிய நிதி ஸ்திரத்தன்மை அமைப்பு சனிக்கிழமை அறிவித்தது. இந்நிலையில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து இன்று பொதுமக்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஐரோப்பிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்றால் கூடுதல் நிதி கிடைக்கும். இந்நிலையில் அந்த கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என்று பிரதமர் அலெக்சிஸ் மக்கள் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Debt ridden Greece people have voted on sunday to decide whether to accept the conditions of European union or not.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X