For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அட்சய திருதியை... எத்தனை கிலோ தங்கம் விற்பனையாகும்... எகிறும் எதிர்பார்ப்பு

அட்சய திருதியை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த ஆண்டு 30 % கூடுதலாகத் தங்க நகைகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நகை விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அட்சய திருதியை தினம் இந்த ஆண்டு நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. தங்க நகைக்கடைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அட்சய திரிதியை அன்று 30 % கூடுதலாகத் தங்க நகைகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களிடையே உள்ள நேர்மறையான நம்பிக்கை, நகைக் கடைகளின் ஆக்ரோஷமான விளம்பரப் பிரச்சாரங்கள் போன்றவையே அன்றைய தினத்தில் கூடுதலாக நகை விற்பனையாகக் காரணம் என்று அனைத்திந்திய ரத்தினங்கள் மற்றும் நகை வர்த்தக சபைத் தலைவர் நிதின் காண்டெல்வால் தெரிவித்துள்ளார்.

தங்கம் வாங்க நல்ல நாள்

தங்கம் வாங்க நல்ல நாள்

அட்சய திருதியை தினம் தங்கம் வாங்க நல்ல நாள் என்று மக்கள் கருதுகின்றனர். இதையே விளம்பரப்படுத்தி நகைக்கடைகளும் கல்லா கட்டுகின்றன. செய்கூலி, சேதாரம் இல்லை என கூறியும் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தியும் வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றனர்.

தங்கநகை விற்பனை

தங்கநகை விற்பனை

2011 ஆம் ஆண்டு அட்சய திரிதியை நாளில் 700 கிலோ தங்கம் விற்பனை ஆன நிலையில், 2012 ஆம் ஆண்டு அதன் விற்பனை 720 கிலோவாக அதிகரித்திருந்தது. 2013ல் 1,100 கிலோவும், 2014 ஆண்டு 2000 கிலோவும் தங்கம் விற்பனையானது. 2015ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் அட்சய திருதியை விற்பனை நடைபெற்றது. முதல்நாளில் 1,100 கிலோ, இரண்டாம் நாளில் 2,100 கிலோ என இரண்டு நாட்களில் மட்டும், 3,200 கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளது. இதன் மதிப்பு, 1,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் விலை குறைவு

தங்கம் விலை குறைவு

அட்சய திருதியை நுகர்வோரின் உணர்வுகளைத் தான் வெளிப்படுத்துகிறது என்று உலக தங்க கவுன்சிலின் இந்திய நிர்வாக இயக்குநர் பி.ஆர்.சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். இந்த வருடம் நகை மற்றும் முதலீட்டுத் தேவையும் அதிகரித்துள்ளது.

எண்ணிக்கை அதிகரிக்கும்

எண்ணிக்கை அதிகரிக்கும்

தங்கத்தின் விலையும் சற்று குறைந்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்ய இது சரியான தருணம் என்றும் கருதுகின்றனர். அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் முகூர்த்த நாட்கள் அதிகம் உள்ளதால் திருமணத்திற்காக நகை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

தங்கம் விலை சரிவு

தங்கம் விலை சரிவு

அட்சய திருதியை இந்த ஆண்டு நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.464 சரிந்துள்ளது. அட்சய திருதியை விற்பனை நாளைத் துவங்கும் நிலையில், தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

30 சதவிகிதம் அதிகரிக்கும்

30 சதவிகிதம் அதிகரிக்கும்

இந்த அட்சய திருதியை நாளில் 30 சதவிகிதம் கூடுதலாக நகை விற்பனை ஆகும் என்று பிஜே கட்ஜில் ஜூவல்லர்ஸின் தலைவர் சவ்ராப் கட்ஜில் தெரிவித்தார். தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வருவதால் நகை விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Gold is likely to glitter this Akshaya Tritiya, which is considered an auspicious day to buy the yellow metal, with jewellers expecting up to 30% growth in sales.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X