For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குறிப்பிட்ட அளவுக்கு மேல் செலவழித்தால் பான் கார்டு விவரம் வேண்டும்... பாஜக அரசின் அடுத்த அடி

Google Oneindia Tamil News

டெல்லி: குறிப்பிட்ட அளவுக்கு மேல் இனிமேல் பணம் செலவழித்தால் பான் கார்டு எண்ணைக் காட்ட வேண்டும் என்று விரைவில் அறிவிப்பு வெளியாகும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

மக்கள் தங்களது சுய விருப்பம் போல இப்போது வங்கியில் ஏடிஎம் கார்டு மூலம் எடுக்க முடியாத நிலை உள்ளது. அதற்கு ஏகப்பட்ட விதிகளைக் கொண்டு வந்து மக்களை சிரமப்படுத்தி வருகிறது பாஜக அரசு.

இந்த நிலையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணத்தை செலவழித்தால் பான் கார்டு எண்ணைக் காட்ட வேண்டும் என்று கொண்டு வரப் போகிறார்களாம். இதை அருண் ஜேட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார். இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகப் போகிறார்கள்.

ஆனால் கருப்புப் பணப் புழக்கத்தை கட்டுக்குள் வைக்கவே இந்த திட்டம் என்று ஜேட்லி கூறியுள்ளார். ஜேட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் இதுதொடர்பாக குறிப்பிட்டுள்ளதாவது:

பான் கார்டு காட்ட வேண்டும்

பான் கார்டு காட்ட வேண்டும்

குறிப்பிட்டு அளவுக்கு மேல் பணப் பரிவர்த்தை மேற்கொள்வோர் கண்டிப்பாக தங்களது பான் கார்டு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறை விரைவில் நடைமுறைக்கு வரும்.

வரி ஏய்ப்பைத் தடுக்க

வரி ஏய்ப்பைத் தடுக்க

வரி ஏய்ப்பு செய்வோரை துல்லியமாக கண்டுபிடித்து சட்டத்தின் முன் கொண்டு வருவதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் வருமான வரித்துறையினருக்கு செய்து தரப்பட்டுள்ளது.

பணப் பரிவர்த்தனை கண்காணிப்பு

பணப் பரிவர்த்தனை கண்காணிப்பு

அதிக அளவில் பணத்தை எடுப்போர், அதிக அளவிலான பணப் பரிவர்த்தனை ஆகியவற்றை கண்டுபிடிக்கும் பணியில் வருமான வரித்துறையினர் முன்பை விட இப்போது விழிப்புடன் செயல்படுகின்றனர்.

பணத்தை வைத்து எதை வாங்கினாலும் கணக்கு காட்ட வேண்டும்

பணத்தை வைத்து எதை வாங்கினாலும் கணக்கு காட்ட வேண்டும்

முன்பு போல இப்போது பெருமளவிலான பொருள் வாங்குதல், பணம் செலவழித்தல் ஆகியவை கண்டு கொள்ளப்படாமல் விட மாட்டாது. பெரிய அளவில் செய்யப்படும் செலவுகள் கண்காணிக்கப்படும். அதை வருமான வரித்துறை செய்யும்.

1 லட்சத்திற்கு மேல் செலவு செய்தால்

1 லட்சத்திற்கு மேல் செலவு செய்தால்

ரூ. 1 லட்சத்திற்கு மேல் எதை வாங்கினாலும் அதற்கு பான் கார்டு எண் விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

கருப்புப் பணம் இங்கேயேதான் உள்ளது

கருப்புப் பணம் இங்கேயேதான் உள்ளது

கருப்புப் பணத்தைத் தேடி வெளியில் அலைய வேண்டியதில்லை. நமது நாட்டுக்குள்ளேயேதான் அது இருக்கிறது. அதை தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமாகிறது என்று அவர் கூறியுள்ளார்.

English summary
To check generation of domestic black money, the government will soon make it mandatory to furnish PAN card details for cash transactions beyond a certain threshold, Finance Minister Arun Jaitley said today."The government is at an advanced stage in considering the requirement of furnishing PAN card details if cash transactions beyond a certain limit are undertaken," Jaitley said in a Facebook post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X