For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் 101 கோடீஸ்வரர்கள் ! முகேஷ் அம்பானி 10வது ஆண்டாக நம்பர் 1 - ஃபோர்ப்ஸ்

இந்தியாவில் மொத்தம் உள்ள 101 பில்லியனர்களின் இருப்பதாகவும் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருப்பதாகவும் ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியல் தெரிவிக்கிறது.

By Super Admin
Google Oneindia Tamil News

மும்பை: உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் 2,043 கோடீஸ்வரர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் 101 கோடீஸ்வரர்கள் உள்ளனர். தொழிலதிபர் முகேஷ் அம்பானியை, இந்தியாவின் நம்பர்1 பணக்காரர் என்று தொடர்ந்து 10வது ஆண்டாக, ஃபோர்ப்ஸ் தேர்வு செய்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பை கணக்கிட்டு ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியல் வெளியிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டுக்கான உலக கோடீஸ்வரர்கள், இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்கள் சொத்து மதிப்பும் பட்டியலிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 2,043 கோடீஸ்வரர்கள் இருப்பதாக ஃபோர்ப்ஸ் பட்டியலிட்டுள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு 7.67 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

பில்கேட்ஸ் நம்பர் 1

பில்கேட்ஸ் நம்பர் 1

மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் முதல் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 86 பில்லியன் அமெரிக்க டாலராகும். இரண்டாவது இடத்தில் பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத்தின், வாரன் பஃபெட் உள்ளார். அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஃபேஸ்புக்கின் மார்க் சக்கர்பெர்க் ஐந்தாவது இடம், ஆரக்கிளின் லாரி எலிசன் ஏழாவது இடம் என்று டாப் டென் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளனர்.

டொனால்ட் டிரம்ப்

டொனால்ட் டிரம்ப்

இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 544வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 3.5 பில்லியன் டாலர் ஆகும். குறிப்பாக, பில்லியனர்கள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. அங்கு மொத்தம் 565 பில்லியனர்கள் இருக்கிறார்கள். 319 பில்லியனர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 114 பில்லியனர்களுடன் ஜெர்மனி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இந்தியாவில் 101 கோடீஸ்வரர்கள்

இந்தியாவில் 101 கோடீஸ்வரர்கள்

இந்தியாவுக்கு இந்தப் பட்டியலில் நான்காவது இடம். இந்தியாவில் 101 கோடீஸ்வரர்கள் உள்ளதாக ஃபோர்ப்ஸ் பட்டியலிட்டுள்ளது. முதல்முறையாக, இந்த ஆண்டு, இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது.

முகேஷ் அம்பானி நம்பர் 1

முகேஷ் அம்பானி நம்பர் 1

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி, உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 33ஆவது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அளவில் நம்பர் 1 பணக்காரர் என்ற அந்தஸ்தை தொடர்ந்து 10 வது ஆண்டாக தக்க வைத்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 23.3 பில்லியன் டாலர்.

பட்டியலில் யார்? யார்?

பட்டியலில் யார்? யார்?

லட்சுமி மிட்டல் 16.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் விப்ரோ நிறுவன சேர்மன் அசீம் பிரேம்ஜி , அதானி நிறுவனர் கௌதம் அதானி, பாஜாஜ் நிறுவன உரிமையாளர் ராகுல் பஜாஜ், இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி. நந்தன் நில்கேனி, மகேந்திரா நிறுவன உரிமையாளர் ஆனந்த் மகேந்திரா எஸ் பேங்க் ரானா கபூர், பேடியெம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானியிடம் 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே உள்ளது. உலக அளவில் 745 வது இடத்தில் உள்ளார்.

பெண் கோடீஸ்வரிகள்

பெண் கோடீஸ்வரிகள்

இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் சாவித்ரி ஜிந்தால், ஸ்மிதா கிருஷ்ணா, கிரண் மஜூம்தார், லீனா திவாரி ஆகிய 4 பெண்களும் இடம்பெற்றுள்ளனர்சாவித்ரி ஜிண்டால் உலக அளவில் 303வது இடத்தில் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 5.2 பில்லியன் அமெரிக்க டாலராகும். ஸ்மிதா உலக அளவில் 814வது இடத்திலும் கிரண் மஜூம்தார் 973வது இடத்திலும் லீனா 1030வது இடத்திலும் உள்ளார்.

English summary
The Forbes list of the 'World's Billionaires' 2017.India is home to world's fourth highest number of billionaires with Reliance Industries chief Mukesh Ambani leading the club of more than 100 super rich Indians, according to a new list released by Forbes magazine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X