For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹாலிடே போனஸ் “ஐபோன் 6 பிளஸ்”ஆ? – 3 ஆயிரம் ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இன்போசிஸ்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: மென்பொருள் துறையில் மிகப்பிரபலமான நிறுவனமான இன்போசிஸ் தன்னுடைய 3,000 ஊழியர்களுக்கு விலையுயர்ந்த ஆப்பிள் நிறுவன செல்போன்களை பரிசாக வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒருபக்கம் மென்பொருள் துறையில் குறையும் வேலைவாய்ப்புகளால் ஊழியர்கள் வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாலும், இன்னொரு புறம் இன்போசிஸ் போன்ற மென்பொருள் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சிகளை வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.

Infosys gifts 3,000 employees’ iPhone6 handsets

இந்தியாவில் கார்ப்பரேட் கம்பெனிகள் ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் அந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றி நிறுவனத்தை லாபப் பாதைக்கு கொண்டு சென்ற பணியாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறது.

ஆனால், சமீபகாலமாக சில முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் விடுமுறை நாட்களுக்கான போனஸாக பணியாளர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ்களைக் கொடுத்து வருகிறது.

Infosys gifts 3,000 employees’ iPhone6 handsets

உதாரணமாக பிரபல மென்பொருள் கம்பெனியான ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் அண்மையில் 130 டாப் பெர்பாமன்ஸ் பணியாளர்களுக்கு ஹாலிடே போனசாக விலையுயர்ந்த பென்ஸ் காரை பரிசளித்தது.

அதைப்போல இன்போசிஸ் நிறுவனம் 3 ஆயிரம் பணியாளர்களுக்கு தற்போது நடைமுறையில் அதிக விலையுள்ள ஐபோன் 6 எஸ் ஸ்மார்ட்போன்களை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

English summary
Ever since Chief Executive Vishal Sikka took the helm at Infosys, his focus has clearly been on the employees- from easing internal processes to encouraging out-of-the-box thinking. Now, possibly the first time ever, the IT outsourcing major has gifted some high performers Apple's latest iPhones as a token of appreciation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X