For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவின் தங்க வேட்கை குறைகிறதா?

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய நிதியமைச்சகம் கொடுத்துள்ள புள்ளிவிவரத்தைப் பார்த்தால் இந்திய மக்களின் தங்க வேட்கை குறைந்து வருவது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்தியாஸ்பெண்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சகம் புள்ளி விவரப் பட்டியல் ஒன்றைத் தாக்கல் செய்தது. அதன் விவரங்களைப் பார்த்தால், இந்தியர்களி்ன் தங்க மோகம் குறைந்து வருவதாக தோன்றுவதாக இந்தியாஸ்பெண்ட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Is India’s Gold Fascination Waning?

கடந்த 2011-12 ஆண்டில் இந்தியா மொத்தம் 1,078.35 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இது 2013-14ம் ஆண்டில் 38 சதவீதம் குறைந்து 661.71 டன் தங்கமே இறக்குமதியானது. நடப்பு நிதியாண்டில் அதாவது ஏப்ரல் முதல் அக்டோபர் வரை, இது மேலும் குறைந்து 474.46 டன்னாக இருந்தது.

கடந்த ஆண்டு தங்க இறக்குமதி மீதான தீர்வையை மத்திய அரசு உயர்த்தியது. இதன் மூலம் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் நடப்பு வருவாய் பற்றாக்குறையைக் குறைக்க முடியும் என மத்திய அரசு கருதியது. அதேசமயம், கடந்த மே மாதம் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியது. ஆனால் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் இந்த கட்டுப்பாடுகள் மீண்டும் அமலாக்கப்பட்டன.

கடந்த நவம்பர் மாதம் தங்க இறக்குமதி 151.58 டன்னாக திடீர் உயர்வைக் கண்டது. இது கடந்த அக்டோபர் மாதத்தை விட 38 சதவீதம் அதிகமாகும். அக்டோபரில் இது 109.55 டன்னாக இருந்தது.

உலக அளவில் தங்கத்தின் இருப்பு 32,139.1 டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா 11வது இடத்தில் உள்ளது. இ்நதியாவில் 557.7 டன் தங்கம் இருப்பு உள்ளது. அமெரிக்காவிடம் 8133.5 டன் இருப்பு உள்ளது. இதுதான் முதலிடத்திலும் உள்ளது. 2வது இடத்தில் ஜெர்மனி 3384.2 டன் தங்கத்துடனும் உள்ளன.

அதேசமயம், உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் சர்வதேச நிதியத்திடம், அமெரிக்காவிடம் உள்ள தங்கத்தில் கால் பங்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Has the government finally succeeded in weaning Indians away from gold? It seems so, going by data released by the finance ministry to the Parliament recently. While India imported over 1,078.35 tonnes in 2011-12, the imports dropped sharply (38%) to 661.71 tonnes in 2013-14. Imports have slipped further to 474.46 tonnes during the first seven months of the current financial year (April-October).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X