For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூர் ஐ.டி துறைக்கு வரும் ரூ.3,000 கோடி புதிய முதலீடுகள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக அரசு ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள தகவல் தொழில்நுட்ப (ஐடி) திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதுபோன்ற பெரிய முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதியளிப்பதற்காக கர்நாடகாவில் முதல்வர் தலைமையில், மாநில உயர்மட்ட கமிட்டி இயங்கி வருகிறது. அந்த கமிட்டி இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

பெங்களூரில் இன்டல் நிறுவனம் ரூ.1100 கோடி செலவில், 2வது கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மேம்பாடு மையம் மற்றும் ஹார்டுவேர் டிசைன் சேவை வசதி ஆகியவற்றை அமைக்கும் திட்டமும் இதில் அடங்கும். இதன்மூலம், 3 ஆயிரம் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.

Karnataka clears 9 IT projects worth Rs 3,097 crore

பெங்களூர்-எலக்ட்ரானிக்சிட்டியில் வேளாங்கன்னி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ.1130 கோடி செலவில் முதலீடு செய்யவும் இதன் மூலம் 2400பணியிடங்களை உருவாக்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அமின் புராப்பர்டீஸ் ரூ264.25 கோடி செலவில், பெங்களூர்-தேவனஹள்ளி சிறப்பு பொருளாதார மண்டலத்தில், முதலீடு செய்யவும், 8 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல நிறுவனங்களின் முதலீட்டு திட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

English summary
Karnataka government has cleared nine IT projects with a combined investment of Rs 3,097 crore, including a proposal by global chip maker Intel's Indian subsidiary, which will invest Rs 1,100 crore in software and hardware facilities in the city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X