For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மைக்ரோசாப்ட் ஆர்டர் இல்லை... ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை மூடப்படுகிறது!

By Shankar
Google Oneindia Tamil News

Nokia to shut down Sriperumbuthur plant from No 1
சென்னை: ஆர்டர்கள் வராததால் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவந்த நோக்கியா செல்போன் தொழிற்சாலை வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் மூடப்படுகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா செல்போன் தொழிற்சாலை இயங்கிவருகிறது.

செல்போன் உற்பத்திக்குத் தேவையான எந்த ஒப்பந்தமும் கிடைக்காத நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனமும் செல்போன் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை சென்னை தொழிற்சாலைக்கு ரத்து செய்ததது.

இதனால் செல்போன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையை மூடுவதற்கான முடிவை எடுத்துள்ளதாக சென்னை நோக்கியா தொழிற்சாலை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொழிற்சாலையில் 6000 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். நோக்கியா நிறுவனம் ஏற்கெனவே இந்தியாவில் வரி பாக்கி வைத்துள்ளது. இதனால், சென்னை தொழிற்சாலையை தன் ஒப்பந்தத்துக்குள் சேர்க்க மறுத்துவிட்டது மைக்ரோசாப்ட்.

English summary
Nokia Tuesday said that it will be stoping manufacturing of all its devices at the Chennai plant from November 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X