For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புழக்கத்திற்கு வரும் புது 50 ரூபாய் நோட்டு... சிறப்பம்சம் என்னென்ன?

சில்லறை தட்டுப்பாட்டை போக்கும் விதமாக புதிய வடிவத்தில் 50 ரூபாய் நோட்டு வெகு விரைவில் புழக்கத்கிற்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

By Staff
Google Oneindia Tamil News

Recommended Video

    வருகிறது புதிய 50 ரூபாய் நோட்டு..Issue of New Rs 50, Rs 20 notes will starts soon- Oneindia Tamil

    டெல்லி: புதிய 50 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஹம்பி வரலாற்றுச் சின்னமான கல்தேர் அந்த புதிய ரூபாய் தாளில் இடம் பெற்றுள்ளது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதாக அறிவிக்கப்பட்டன. திடீரென எடுக்கப்பட்ட இந்த உயர் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

    மக்களின் அவதியைப் போக்கும் பொருட்டு உடனடியாக தற்காலிக நடவடிக்கையாக குறைந்த அளவில் புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து புழக்கத்திற்கு விடப்பட்டன.

    சில்லறை தட்டுப்பாடு

    சில்லறை தட்டுப்பாடு

    புதிதாக நோட்டுக்கள் அச்சடித்து புழக்கத்திற்கு விடப்பட்டாலும், சாதாரண மக்களுக்கு 500 மற்றம் 2000 ரூபாய் நோட்டுக்களும், 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலான குறைந்தை மதிப்புடைய நோட்டுக்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

    புதிய ரூபாய் நோட்டுக்கள்

    புதிய ரூபாய் நோட்டுக்கள்

    மக்களின் இந்த சிரமங்களை போக்கும் விதமாக விரைவில் 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையில் புதிதாக நோட்டுக்கள் அச்சடித்து புழக்கத்திற்கு விடப்படும் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது போல புதிதாக 200 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

    200 ரூபாய் நோட்டு

    200 ரூபாய் நோட்டு

    மக்கள் எதிர்பார்த்தது போலவே செப்டம்பர் மாதத்திலிருந்து புழக்கத்திற்கு விடப்படும் என்று கடந்த மாதத்தில் மத்திய ரிசர்வ் வங்கியும் அறிவிப்பு வெளியிட்டது. மக்களும் 200 ரூபாய் நோட்டுக்களை பார்க்கும் ஆவலில் எப்போது வரும் என்று காத்துக்கிடக்கின்றனர்.

    50 ரூபாய் நோட்டு

    50 ரூபாய் நோட்டு

    தற்போது 200 ரூபாய் நோட்டுக்கள் எப்போது வரும் என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால், அதற்கு பதில் புதிய வடிவத்தில் 50 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு விடப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இதனை உறுதி செய்வதுபோல் புதிய வடிவிலான 50 ரூபாய் நோட்டுக்கள் அடங்கிய கட்டுகளின் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன.

    உர்ஜித் படேல் கையெழுத்து

    உர்ஜித் படேல் கையெழுத்து

    இந்த புதிய 50 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடுவதற்கான ஆவணங்களில் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேல் ச கையெழுத்திட்டு உள்ளார். கடந்த ஆண்டின் இறுதியிலேயே புதிதாக மகாத்மா காந்தி 2005 என்ற வரிசையில் 50 ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து புழக்கத்திற்கு விடப்படும் என்று உர்ஜித் பட்டேல் உறுதி அளித்திருந்தார்.

    ரிசர்வ் வங்கி அறிவிப்பு

    உர்ஜித் படேல் சொன்னது போலவே புதிய 50 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய ரூபாய் நோட்டு கடல் நீல நிறத்தில் உள்ளது. முன்பக்கத்தில் மகாத்மா காந்தி படம் அச்சிடப்பட்டுள்ளது.

    ஹம்பி கல்தேர்

    ஹம்பி கல்தேர்

    ரூபாய் தாளின் பின்பக்த்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஹம்பி வரலாற்றுச் சின்னமான கல்தேர் படம் அச்சிடப்பட்டுள்ளது. ஸ்வச் பாரத் சின்னமும் அச்சிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

    பழைய 50 ரூபாயும் செல்லும்

    பழைய 50 ரூபாயும் செல்லும்

    இந்தியாவின் பாரம்பரிய பெருமையை வெளிப்படுத்தும் விதமாக ஹம்பி கல்தேர் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. பழைய 50 ரூபாய் தாள்களும் தொடர்ந்து செல்லத்தக்கவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The Reserve Bank of India will shortly issue ₹ 50 denomination banknotes in the Mahatma Gandhi (New) Series, bearing signature of Dr. Urjit R. Patel, Governor, Reserve Bank of India. The new denomination has motif of Hampi with Chariot on the reverse, depicting the country’s cultural heritage.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X