For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்பிஐ வங்கியின் சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் தடாலடியாகக் குறைப்பு - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

By Staff
Google Oneindia Tamil News

கொல்கத்தா: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கில் உள்ள இருப்புத் தொகைக்கு வழங்கும் வட்டி விகிதத்தை 4 சதவிகிதத்திலிருந்து 0.50 சதவிகிதத்தை குறைத்துள்ளது.

ஒரு கோடி ரூபாய் வரையிலான சேமிப்புக்கு 4 சதவிகிதத்திலிருந்து 3.5 சதவிகிதமாக வட்டி சதவிகிதத்தை குறைத்து பாரத ஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று அறிவித்துள்ளது.

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில், கணக்கு வைத்திருப்பவர்களில் சுமார் 90 சதவிகிதத்தினர் ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாக இருப்பு வைத்திருப்பவர்தான் எனவே பாரத ஸ்டேட் வங்கியின் அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்பிஐ வங்கி அறிவிப்பு

எஸ்பிஐ வங்கி அறிவிப்பு

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரதமல் மோடியின் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிப்பிற்கு பின்பு நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியானது அடிக்கடி தன்னுடைய வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

ஏடிஎம் சேவை கட்டணம்

ஏடிஎம் சேவை கட்டணம்

ஏற்கனவே கடந்த மாதத்தில், வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து எந்த ஒரு ஏடிஎம் மூலமும் எடுக்கப்படும் பணத்திற்கு 25 ரூபாய் சேவைக் கட்டணமாக அவர்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படும் என்று அதிர்ச்சி அளித்தது.

வாடிக்கயைளர்கள் அதிர்ச்சி

வாடிக்கயைளர்கள் அதிர்ச்சி

இப்போது சேமிப்பு கணக்கிற்கு வழங்கும் வட்டியை குறைத்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்களின் எஸ்பிஐ வங்கிக் கணக்கை தடாலடியாக முடித்துவிட்டு தங்களுக்கு வசதியான வேறு வங்கிகளில் கணக்கை துவங்கிவிட்டனர்.

Recommended Video

    SBI Given Card Swipe Machine to Traffic Police-Oneindia Tamil
    திடீர் மறுப்பு

    திடீர் மறுப்பு

    இதனால் வேறு வழி இல்லாத எஸ்பிஐ வங்கியானது, மறுப்பு அறிவிப்பு வெளியிட்டு தங்களுடைய வங்கி ஏடிஎம்களில் எடுக்கப்படும் பணத்திற்கு சேவைக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என்றும் எஸ்பிஐ அல்லாத வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் எடுக்கப்படும் பணத்திற்கு மட்டுமே சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தது.

    ரூ. ஒரு கோடி இருப்பு

    ரூ. ஒரு கோடி இருப்பு

    அதுபோலவே, இப்போதும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

    தற்போது வரை எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் கணக்கிள் உள்ள இருப்புத் தொகைக்கு ஆண்டிற்கு 4 சதவிகிதம் வரை வட்டி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனிமேல் அந்த இருப்புத் தொகைக்கு ஆண்டிற்கு 3.5 சதவிகிதம் வட்டி மட்டுமெ அளிக்கப்படும் என்று இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    ஒருகோடி ரூபாய்க்கு மேல்

    ஒருகோடி ரூபாய்க்கு மேல்

    அதாவது, வாடிக்கையாளர்களின் கணக்கில் ஒரு கோடி ரூபாய் வரை இருப்பு வைத்துள்ள கணக்கிற்கு 3.5 சதவிகிதம் வட்டி அளிக்கப்படும் என்றும், ஆனால், அதே சமயம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான இருப்பு வைத்துள்ள சேமிப்புக் கணக்குகளுக்கு 4 சதவிகித வட்டி விகிதம் அளிக்கப்படுவதில் எந்தவித மாற்றமும் கிடையாது என்றும் அறிவித்துள்ளது.

    நிரந்தர வைப்புத் தொகை

    நிரந்தர வைப்புத் தொகை

    மேலும், எஸ்பிஐ வங்கிகளில் வைக்கப்படும் நிரந்தர வைப்புத் தொகைகளுக்கு (Fixed Deposits) தற்போது வரை 6.90 சதவிகிதம் வரை வட்டி அளிக்கப்பட்டுவந்தது. ஆனால். தற்போது வங்கிகளில் வைக்கப்படும் நிலையான வைப்புத் தொகைகளுக்கு 6.75 சதவிகிதம் வட்டி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    SBI has cut interest rate on savings bank accounts to 3.5 per cent from 4 per cent on balance of Rs 1 crore and below.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X