For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா- பாக். போர் மூளும் அபாயம்.. சென்செக்ஸ் வீழ்ச்சி.. ரூபாய் மதிப்பும் சரிந்தது!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே போர்ப் பதட்டம் அதிகரித்திருப்பதால் மும்பை பங்குச் சந்தை ஆட்டம் கண்டுள்ளது. சென்செக்ஸ் வேகமாக வீழ்ச்சி அடைந்தது. அதேபோல ரூபாய் மிதிப்பும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இந்திய விமானப்படை நேற்று பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்கியதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே போர்ப் பதட்டம் அதிகரித்துள்ளது. பெரிய அளவிலான போர் மூளுமோ என்ற அச்சம் இரு நாடுகளிலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பங்குச் சந்தையிலும் இது எதிரொலித்தது.

Sensex and Rupee value see the fall after IAF attack

சென்செக்ஸ் இன்று 572 புள்ளிகள் சரிந்தது. அதேபோல நிப்டியும் சரிந்து 8558 ஆக இருந்தது. ரூபாய் மதிப்பும் 36 பைசா குறைந்து ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 66.91 ஆக சரி்ந்தது.

இரு நாடுகளுக்கு இடையிலான பதட்டம் அதிகரித்தால் அது பங்குச் சந்தையில் மேலும் பல சரிவுகளை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 27,875 ஆகவும், நிப்டி 8609 ஆகவும் இருந்தன.

English summary
Sensex and Rupee value have witnesses a major fall after IAF attack on the Pakistan terror launcpads.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X