For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் அதிமுக ஆட்சி என்பது தெரிந்ததும் ஏறிய வேகத்தில் சரிந்த சன் டிவி பங்குகள்!

By Shankar
Google Oneindia Tamil News

மும்பை: தமிழக தேர்தலில் மீண்டும் அதிமுக வென்று ஆட்சியைப் பிடிப்பதற்கான அறிகுறி தெரிந்த உடனே பங்குச் சந்தையில் சன் டிவியின் பங்குகள் விலை 10 சதவீதம் சரிவடைந்தது.

இரு தினங்களுக்கு முன் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானபோது, பெரும்பாலான ஊடகங்கள் திமுகவே ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்து தெரிவித்தன.

Sun TV shares fall again

இதனால் அன்றைய தினம் சன் டிவியின் பங்குகள் விலை 10.3 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தது. 9 லட்சம் பங்குகள் கைமாறின.

இன்று உண்மையான தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியதுமே அதிமுக முன்னிலை வகிப்பது தெரிந்துவிட்டது. இதன் எதிரொலியாக சன் டிவி பங்குகள் விலை மளமளவென சரியத் தொடங்கிவிட்டது. இன்று பதினோரு மணி நிலவரப்படி 10.75 சதவீதம் விலை குறைந்து ரூ 381.45க்கு விற்பனையாகின சன் டிவி பங்குகள். அதாவது பங்கு ஒன்றுக்கு ரூ 46.10 வீதம் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 6.3 சதவீதம் குறைந்து ரூ 401.45-க்கு விற்பனையானது.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ராஜ் டிவியின் பங்குகள் விலை 17 சதவீதம் உயர்ந்து ரூ 71.80 -க்கு விற்பனையானதுதான்!

English summary
Due to ADMK's advantage in TN election results, the shares of Sun Network in Sensex fell 10.75 percent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X