For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டின் மொத்த பணவீக்கம் 5.25% ஆக அதிகரிப்பு.... சில்லறை பணவீக்கம் 3.17% ஆக சரிவு

ஜனவரி மாதத்தில், நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 5.25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நுகர்வோர் பணவீக்கம் ஜனவரி மாத முடிவில், 3.17 சதவிகிதமாக சரிவடைந்துள்ளது.

By Super Admin
Google Oneindia Tamil News

டெல்லி: மொத்த விலை பணவீக்கம் சென்ற டிசம்பர் மாத முடிவில் 3.39% ஆக இருந்த நிலையில், ஜனவரி முடிவில், இது 5.25 சதவிகிதமாக உயர்வடைந்துள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் காரணமாக, அத்தியாவசிய பொருட்கள் விலையில் ஏற்ற, இறக்கச் சூழல் காணப்படுகிறது. இதுவே, மொத்த விலை பணவீக்கத்தில் தற்போது உயர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும், விரைவில் இந்த மதிப்பு சரிவடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சில்லறை பணவீக்கம்

சில்லறை பணவீக்கம்

அதேசமயம், சில்லறை பணவீக்கம் ஜனவரி மாத முடிவில், 3.17 சதவீதமாகச் சரிவடைந்துள்ளது. இது சென்ற டிசம்பர் மாதத்தில் 5 சதவீதமாக உயர்ந்திருந்தது

இது கடந்த 37 மாதங்களில் காணும் அதிகபட்ச சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

காய்கறிகள்

காய்கறிகள்

நாட்டின் சில்லறை பணவீக்கமானது, நுகர்வோர் விலை குறியீட்டில் கணக்கீடு செய்யப் படுகிறது. அது கடந்த டிசம்பர் மாதத்தில் 3.41 சதவிகிதமாக இருந்தது.

குறிப்பாக காய்கறிகளுக்கான பணவீக்கமானது எதிர்மறையாகவே இருந்துள்ளது.

பருப்பு விலை

பருப்பு விலை

டிசம்பர் மாதத்தில் மைனஸ் 14.59 சதவிகிதமாக இருந்த பணவீக்கம், ஜனவரி மாதத்தில் மைனஸ் 15.62 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இத்தகவலை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை வெளியிட்டுள்ளது. காய்கறிகள் மற்றும் பருப்பு விலை உயராமல் இருந்ததே பணவீக்க உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

பழங்கள்

பழங்கள்

பருப்பு வகைகளுக்கான விலை உயர்வு அளவு மைனஸ் 6.62 சதவிகிதமாக இருந்துள்ளது. பழங்களுக்கான பணவீக்கம் 5.81 சதவிகிதமும், இறைச்சி மற்றும் மீன்களுக்கான பணவீக்கம் 2.98 சதவிகிதமாகவும் உள்ளது.

பணமதிப்பு நீக்கம்

பணமதிப்பு நீக்கம்

கடந்த நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் நாட்டில் நுகர்பொருட்களுக்கான தேவை குறைந்தது. ஒட்டுமொத்தமாக நுகர்பொருட்களுக்கான சில்லறை பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 0.53 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.

நகர்புறங்கள்

நகர்புறங்கள்

கிராமப்புறங்களில் சில்லறை பணவீக்கம் டிசம்பரில் 3.83 சதவிகிதமாக இருந்தது. அது ஜனவரியில் 3.36 சதவிகிதமாக இருக்கிறது. மேலும், நகர்ப்புற சில்லறை

பணவீக்கம் 2.90 சதவிகிதமாக உள்ளது.

English summary
WPI inflation in January spiked to 5.25 percent against 3.39 percent in previous month and also ahead of expectations of 4.16 percent. however, retail inflation declined to 3.17 percent against 3.41 percent due to low demand after demonetisation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X