For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹரியானாவில் சரக்கு லாரி மீது ரயில் மோதி விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பலி

Google Oneindia Tamil News

ஹிசார்: ஹரியானா மாநிலத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற போது சரக்கு லாரி மீது ரயில் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

12 killed as train rams into vehicle at unmanned crossing in Hisar

ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் பாலக் என்ற இடத்தில் ஆளில்லா ரயில்வே கேட் ஒன்றை சரக்கு லாரி ஒன்று கடக்க முற்பட்டுள்ளது. அந்த லாரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த துரி - சிர்சா பயணிகள் ரயில், சரக்கு லாரியின் மீது மோதியது.

இதில், சரக்கு லாரியை ஓட்டி வந்த டிரைவர், 4 குழந்தைகள் உட்பட அதில் பயணம் செய்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

அதிகப்படியான பனிமூட்டம் காரணமாக ரயில் லாரி மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

English summary
Twelve members of a family, including four children, were killed and three others injured when the vehicle they were travelling in was hit by Dhuri-Sirsa passenger train at an unmanned rail crossing in Sarsod village of Hisar on Monday amid dense fog.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X