For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணம் தான் முக்கியமா...? 'வாட்ஸ் அப்'பில் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த மாணவர்

Google Oneindia Tamil News

டெல்லி: பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த உலகில் வாழப் பிடிக்கவில்லை என தனது வாட்ஸ் அப்பில் எழுதி வைத்து விட்டு, 13 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் தனது தாத்தா வீட்டில் தங்கி, 9ம் வகுப்பு படித்து வந்த மாணவன் சானு (14). இவரது தந்தை டெல்லியில் உள்ள பிரபல நிறுவனத்தில் வேலை செய்கிறார். தாயார் துபாயில் வேலை பார்த்து வருகிறார். சானு தனது அண்ணனுடன் தாத்தா வீட்டில் தங்கி பள்ளி சென்று வந்தான்.

13-Year-Old Delhi Boy Commits Suicide, Leaves Note on WhatsApp

இந்நிலையில், சம்பவத்தன்று டெல்லியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர் சானுவும், அவரது அண்ணனும். மறுநாள் காலை கண் விழித்துப் பார்த்த போது சானு தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அவரது அண்ணன் அதிர்ச்சி அடைந்தார்.

உறவினர்கள் உதவியுடன் சானு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு சானுவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்ததை உறுதி செய்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது சானு பயன்படுத்தி வந்த செல்போனில், தற்கொலைக்கு முன் வாட்ஸ் அப்பில் அவன் ஒரு கடித்தை எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அதில், ‘பணத்திற்கு முக்கியதுவம் கொடுக்கும் இந்த உலகில் எனக்கு வாழ பிடிக்கவில்லை' என எழுதபட்டிருந்தது.

இதனை கைபற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Upset with the strained relationship of his parents, a 13-year-old boy committed suicide in Delhi by hanging himself from a ceiling fan and left a note on mobile messaging app WhatsApp, police said on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X