For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உத்தரகண்ட்: 100 அடி கிடுகிடு பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி

By Mathi
Google Oneindia Tamil News

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் 100 அடி ஆழமுள்ள கிடுகிடு பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 25 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிதோரகிராமிற்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அல்மோரா பகுதியில் பிற்பகல் 1 மணிக்கு சென்று கொண்டிருந்த போது திடீரென்று 100 அடி ஆழமுள்ள பள்ளத்தில் பேருந்து எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 15 Killed After Bus Plunges 100-Feet Deep Into Gorge in Uttarakhand

இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டுஅருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அளிக்க உத்தரகாண்ட் மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், சாதாரண காயத்திற்கு 20000 ரூபாய் அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

English summary
Fifteen persons were killed and 25 others injured when a bus, travelling from Pithoragarh to Delhi, fell into a deep gorge in Almora district this afternoon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X