For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திராவில் ரயில் தடம் புரண்ட விபத்தில் 23 பேர் பலி: உதவி எண்கள் அறிவிப்பு

By Siva
Google Oneindia Tamil News

பாத்: ஜகதலபூரில் இருந்து புவனேஸ்வர் நோக்கி சென்ற ஹிராகந்த் எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திராவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ஜகதலபூரில் இருந்து ஒடிஷா மாநிலம் புவனேஸ்வருக்கு கிளம்பிய ஹிராகந்த் எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் விழியநகரம் மாவட்டத்தில் உள்ள குனேரு ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை இரவு 11 மணிக்கு தடம் புரண்டது.

ரயிலின் என்ஜின் உள்பட 8 பெட்டிகள் தடம் புரண்டதில் 23 பேர் பலியாகியுள்ளனர், 100 பேர் காயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

Pro Jallikattu actdivists Dr.P.Rajasekaran, President, Jallikattu Peravai Tamilnadu, Karthikeya Sivasenapathy, Managing Trustee, Senaapathy Kangayam Cattle Research Foundation, Biodiversity Conservation Council of India, Rajesh, Secretary, Veeravilayattu Association Tiruchy and Hiphop Tamizha Adhi are meeting the press this night at 8 pm.

தடம் புரண்ட பெட்டிகளில் ஏராளமானோர் சிக்கியிருப்பதால் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் பார்வதிபுரம் மற்றும் ராயகடாவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருப்பதி ரயில் நிலையத்தில் வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்நிலையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவி எண்கள்:

ராயகடாவில் உதவி எண்கள்: பிஎஸ்என்எல் லேண்ட் லைன் எண்கள்: 06856-223400, 06856-223500, பிஎஸ்என்எல் செல்போன் எண்கள்: 09439741181, 09439741071, ஏர்டெல் 07681878777

விசாகப்பட்டினத்தில் உதவி எண்கள்: ரயில்வே எண்: 83003, 83005, 83006, பிஎஸ்என்எல் லேண்ட் லைன் எண்கள்:0891-2746344, 0891-2746330

English summary
23 persons were killed after seven coaches and the engine of the Jagdalpur-Bhubaneswar Express derailed near Kuneru station in Vizianagaram district of Andhra Pradesh on Saturday night. The incident took place at 11 PM. Helpline numbers have been announced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X