For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவின் ஆதரவு பாஜகவுக்கா, பவார் கட்சிக்கா?

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜக சிவசேனா அல்லது தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் இருப்பதுடன் அக்கட்சி வேட்பாளர்கள் பலர் வெற்றி பெற்று வருகிறார்கள். பாஜக வெற்றி பெற்றாலும் அதனால் பெரும்பான்மையை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜக சிவசேனாவின் உதவியை நாடலாம் என்று கூறப்படுகிறது.

பெரும்பான்மை

பெரும்பான்மை

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் 144 இடங்களாவது பெற்றால் தான் பாஜக ஆட்சி அமைக்க முடியும். அத்தனை இடங்களை அதனால் பெற முடியாத நிலையில் அக்கட்சி கூட்டணி வைத்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை எற்பட்டுள்ளது.

பாஜக-சிவசேனா

பாஜக-சிவசேனா

தேர்தலுக்கு முன்பு உடைந்த பாஜக-சிவசேனா கூட்டணி தற்போது மீண்டும் ஏற்படலாம். அதாவது பாஜக, சிவசேனாவின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம்.

தேசியவாத காங்கிரஸ்

தேசியவாத காங்கிரஸ்

25 ஆண்டு கால கூட்டணியில் உடைந்துள்ளதால் சிவசேனாவை விட்டுவிட்டு பாஜக தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சிக்கு வரலாம்.

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்

பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகியவை கைகோர்க்கலாம். ஆனால் இந்த கூட்டணி அமைவது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது.

English summary
BJP may join hands with either Shiv Sena or NCP to forge alliance to come to power in Maharshtra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X