For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லிபியாவில் நிலைமை சரியில்லை - 34 இந்திய நர்ஸ்கள் தாயகம் திரும்பினர்

Google Oneindia Tamil News

கொச்சி: லிபியாவில் அரசியல் சூழல் சரியில்லாத காரணத்தினால் அங்கு சிக்கித் தவித்த இந்திய நர்ஸ்கள் 34 பேர் பத்திரமாக மீட்டு டெல்லி அழைத்து வரப்படுகின்றனர்.

அவர்களில் 12 பேர் இன்று நாடு திரும்புகின்றனர் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

34 Indian nurses being evacuated from Libya

துனிஷியா வழியாக நாடு திரும்பிக் கொண்டிருக்கும் 12 நர்ஸ்களும் கேரள மாநிலம் கொச்சிக்கு இன்று வர உள்ளதாக அவர் கூறினார்.

மேலும் 22 நர்ஸ்களும் விரைவில் தாயகம் வந்து சேர்வார்கள் என அக்பருதீன் கூறியுள்ளார். லிபியாவில் ஸ்திரமற்ற அரசியல் சூழல் நிலவி வருவதால், அங்கு பணிபுரிந்த இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Nearly 34 Indian nurses are being evacuated from strife-torn Libya by the government and the first batch of 12 will arrive tomorrow in Kochi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X