குஜராத்தை உலுக்கிய நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு

குஜராத்தில் நிலநடுக்கம் தொடர் கதையாகி வருகிறது. பனஸ்கந்தா மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

பனஸ்கந்தா: குஜராத் மாநிலத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளது.

குஜராத் மாநிலம் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகளை எதிர்கொண்டு வருகிறது. கடந்த 3 மாதங்களில் 70 முறை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டிருக்கின்றன.

4.5 magnitude earthquake hits

இவை பெரும்பாலும் 2001-ம் ஆண்டு நிலநடுக்கத்தால் பேரழிவு ஏற்பட்ட கட்ச்/சவுராஷ்டிரா பகுதியிலேயே ஏற்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் ரிக்டரில் சுமார் 4 அலகுகளாகவே பதிவாகி இருந்தன.

இந்தநிலையில் குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 3.52 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரிக்டரில் 4.5 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

English summary
An earthquake measuring 4.4 on the Richter scale shook parts of Banaskantha district in North Gujarat today.
Please Wait while comments are loading...