For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கட்டுப்பாடுகள் பலமாக இருந்தும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 4 பேர் கைது...இது கோவா ஸ்டைல்!

நீட் தேர்வுக்கு பலத்த கட்டுப்பாடுகள் இருந்தும் ஆள்மாறாட்டம் செய்து கோவா மாநிலத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By Devarajan
Google Oneindia Tamil News

பனாஜி: நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில்,நீட் தேர்வு நேற்று நடந்தது. ஆனாலும் அதில் ஆள்மாறாட்டம் செய்து கோவா மாநிலத்தில் 4 பேர் கைதாகியுள்ளனர்.இது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுக்க நேற்று ' நீட்' எழுத்துத் தேர்வு 103 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 204 தேர்வு மையங்களில் நடைபெற்றது.கோவா மாநிலத்தில்,ஆள்மாறாட்டம் நடந்தாக புகார்கள் வந்தன. அதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த இருவரை 'வெர்நா' போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் இருவர் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. உடனடியாக அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

 4 arrested for impersonation in NEET test at Goa

கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் ஏமாற்றுதல், மற்றவர்களின் உரிமையை பறித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இருந்து 2000 பேர் நீட் தேர்வை எழுதிய நிலையில் முந்தை ஆண்டுகளை விட இம்முறை அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் பேனா, பென்சில், ரப்பர், வெற்று அல்லது எழுதிய காகிதங்கள், புத்தகம், பேனா பவுச், லாக் டேபிள், எலக்ட்ரானிக் பென், கால்குலேட்டர், செல்போன், பேஜர், இயர்போன், தொப்பி, கைப்பை, தோள்பை ஆகிய எதையும் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
The Goa police arrested 4 Bihar youths in the state for impersonating during the National Eligibility-cum- Entrance Test (NEET) held yesterday for admission to medical courses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X