For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிலநடுக்கம்: மேற்கு வங்கத்தில் 3 பேர் பலி பள்ளிக்கட்டிடம் இடிந்து 40 மாணவர்கள் படுகாயம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மால்டா: நிலநடுக்கத்தால் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் கட்டிடங்கள் நொறுங்கியுள்ளன. சிலிகுரியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் 69 பேர் படுகாயமடைந்துள்ளனர். மால்டாவில் பள்ளிக்கூடத்தின் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 40 பள்ளி குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேபாளத்தின் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மிகப்பெரிய அளவில் பாதிப்பினை ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 7.9 ஆக பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கத்திற்கு பழமை வாய்ந்த கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இன்று முற்பகல் 11.44 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. மேற்குவங்கம், ஒடிஷா, ஜார்கண்ட் மாநிலங்களிலும் நிலநடுக்க பாதிப்பு உணரப்பட்டுள்ளது.

சிலிகுரியில் 3 பேர் பலி

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நிலநடுக்கத்திற்கு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. 3 பேர் பலியாகியுள்ளதாகவும் 69 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி கட்டிடம் இடிந்தது

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் பள்ளிக் கூடத்தின் கட்டிடம் இடிந்து விழுந்து 40 பள்ளி குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப்பணிகள் பாதிப்பு

இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு பணியினர் ஈடுபட்டுள்ளனர் மழையினால் மீட்புபணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மாணவர்கள் சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Damage to a school in West Bengal during this morning's strong tremors left 40 children injured.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X