For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்னம், தண்ணி இல்லாம இருக்க முடியுமா?.. டிரம்ப்பிடம் பொட்டில் அடித்தாற் போல கேட்ட சிறுமி!

சோறு, தண்ணீர் இல்லாமல் 24 மணி நேரம் உங்களால் இருக்க முடியுமா என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கேட்டுள்ளார் 7 வயது சிரிய நாட்டு சிறுமி.

Google Oneindia Tamil News

டெல்லி: சோறு, தண்ணீர் இல்லாமல் 24 மணி நேரம் உங்களால் இருக்க முடியுமா என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிட்டம் ஒரு சிரிய நாட்டு சிறுமி கேட்டுள்ள வீடியோ பேச்சு வைரல் ஆகியுள்ளது.

7 முஸ்லீம் நாடுகள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்துள்ளார் டிரம்ப். இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களும், அகதிகளும் அமெரிக்காவுக்குள் வருவதற்கு இந்தத் தடை வகை செய்கிறது. அந்த நாடுகளில் ஒன்றுதான் சிரியா.

இந்த தடைக்கு உலகெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்காவிலும் கூட போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சிரியா நாட்டைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பேசியுள்ள வீடியோ வைரல் ஆகியுள்ளது.

பானா அலபாத்

பானா அலபாத்

அந்த சிறுமியின் பெயர் பானா அலபாத். 7 வயதாகிறது. சிரியாவைச் சேர்ந்தவர். உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அலப்போவில் வசித்து வருகிறார். அங்குள்ள சூழல் குறித்தும், மக்களின் நிலையை விளக்கியும் அவர் பேசியுள்ள வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

இருக்க முடியுமா உங்களால்

இருக்க முடியுமா உங்களால்

அந்த சிறுமி தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ள வீடியோவில், நீங்கள் எப்போதாவது 24 மணி நேரத்திற்கு தண்ணீர் குடிக்காமல், சாப்பாடு சாப்பிடாமல் இருந்துள்ளீர்களா? தயவு செய்து அகதிகள் குறித்தும், சிரியாவில் உள்ள குழந்தைகள் குறித்தும் யோசித்துப் பாருங்கள் என்று மழலை மாறாத குரலில், ஆங்கிலத்தில் பேசியுள்ளார் அச்சிறுமி.

வைரல் வீடியோ

இன்னொரு டிவிட்டில் நான் இப்போ தூங்கிட்டிருக்கேன். காலைல வரைக்கும் உங்களுக்கு டைம் தர்றேன். அதுக்குள்ள சிரிய குழந்தைகளுக்கு உதவ முடியுமா, முடியாதான்னு சொல்லனும். பை என்று போட்டு கலக்கியுள்ளார் இச்சிறுமி.

நான் தீவிரவாதியா

இதற்கு முன்பே இச்சிறுமி பிரபலமானவர்தான். மோசமான நோக்கத்துடன் வருபவர்களை அமெரிக்காவுக்குள் நுழைய விடாமல் தடுப்பதே தனது நோக்கம் என்று டிரம்ப் முன்பு கூறியபோது இவர் பதிலுக்கு, நான் தீவிரவாதியா என்று கேட்டு டிவீட் போட்டு மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைச் செய்வீர்களா

அதேபோல முஸ்லீம் நாடுகள் மீதான தடையை டிரம்ப் அறிவித்ததும் இன்னொரு டிவீட்டும் போட்டிருந்தார் அலபாத். அதில், டியர் டிரம்ப். அகதிகளை தடை செய்வது மோசமானது. சரி, அது நல்லதாகவே இருக்கட்டும். என்னிடம ஒரு யோசனை உள்ளது. அதைச் செய்வீர்களா?. மற்ற நாடுகளை நிம்மதியாக இருக்க விடுங்கள் என்று கேட்டிருந்தார் அலபாத்.

காலைல வரைக்கும்தான் உங்களுக்கு டைம்

இன்னொரு டிவிட்டில் நான் இப்போ தூங்கிட்டிருக்கேன். காலைல வரைக்கும் உங்களுக்கு டைம் தர்றேன். அதுக்குள்ள சிரிய குழந்தைகளுக்கு உதவ முடியுமா, முடியாதான்னு சொல்லனும். பை என்று போட்டு கலக்கியுள்ளார் இச்சிறுமி.

தாயின் துணையுடன்

தாயின் துணையுடன்

அலப்போவின் மோசமான சூழல் குறித்தும் அங்கு மக்கள் படும் சிரமம் குறித்தும் தனது தாயார் பதேமாவின் துணையுடன் தொடர்ந்து அலபாத் டிவீட் போட்டு வருவது குறிப்பிடத்தக்து. அலபாத்துக்கு 3,66,000 பாலோயர்கள் உள்ளனர். கடந்த 2016 செப்டம்பர் முதல் இவர் டிவீட் போட்டு வருகிறார்.

English summary
A 7 Year old girl fro Syria Bana Alebed has questioned President Donalad Trump on Muslim ban through Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X