For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜ்ஜார்கள் இடஒதுக்கீடு கோரி தொடர் போராட்டம்- 70 ரயில் சேவைகள் முடக்கம்!!

By Mathi
Google Oneindia Tamil News

ராஜஸ்தான்: இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூகத்தினர் ராஜஸ்தானில் நடத்தி வரும் 2வதுஅன் நாள் தொடர் போராட்டங்களால் ரயில் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் முக்கிய சமூகமான குஜ்ஜார்கள் கடந்த 2007-ம் ஆண்டு முதல் இடஓதுக்கீடு கோரி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது. ஆனால் இதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

70 Trains Affected as Gujjar Agitation in Rajasthan

இதனைத் தொடர்ந்து தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர் குஜ்ஜார்கள். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முக்கிய ரயில் பாதைகளை தகர்த்து அங்கேயே முகாமிட்டு போராடி வருகின்றனர்.

இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் காரணமாக டெல்லி-ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர்-ஆக்ரா, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்கிடையிலான செல்லும் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் 70க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. .10க்கும் மேற்பட்ட ரயிகள் மாற்றுபாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் இம்மார்க்கங்களில் செல்லும் பயணிகள் பெரும் பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

English summary
A total 70 trains have been affected, as hundreds of protesters sat overnight on rail tracks in Rajasthan's Bharatpur district to demand reservation in the state for Gujjars.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X