For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணுவ சர்வாதிகார ஆட்சி அமைய 53% கல்லூரி மாணவர்கள் ஆதரவு! பெண்கள் "அடிவாங்க" 87% பேர் ஆதரவு!!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் ராணுவ சர்வாதிகார ஆட்சி அமைவதற்கு 53% கல்லூரி மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பெண்கள் தங்கள் மீதான வன்முறையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று 87% மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

87% College Students: Women Must Accept Violence

இது தொடர்பாக "Indiaspend" இணையதளம் மாணவர்களிடையே பல்வேறு கருத்து கணிப்புகளை நடத்தியது. நாடு முழுவதும் மொத்தம் 11 மாநிலங்களில் 10,542 மாணவர்களிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் 6,168 பேர் பள்ளி மாணவர்கள்; 4,374 பேர் கல்லூரி மாணவர்கள். பெங்களூர், டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத், குவஹாத்தி, போபால் என பல நகரங்களில் இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன் முடிவு விவரங்கள்:

  • இந்திய குடிமக்கள்தானா என்பது தெரியாது என்கின்றனர் 65% பள்ளி குழந்தைகள்
  • பெண்கள் தங்கள் மீதான வன்முறைகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை என்கின்றனர் 87% கல்லூரி மாணவர்கள்
  • பெண்களைப் பொறுத்தவரை வீட்டு வேலை பார்த்துக் கொண்டு குழந்தைகளை பெற்றெடுத்து வளர்க்க வேண்டும் என்கின்றனர் 51% கல்லூரி மாணவர்கள்
  • உரிமை மற்றும் பொறுப்பு சார்ந்த விஷயங்கள் குறித்து 27% பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது.. கல்லூரி அளவில் 31% மாணவர்கள் அறிந்திருக்கின்றனர்.
  • 35% பள்ளி மாணவர்களே தாங்கள் இந்தியக் குடிமகன் என உணர்ந்திருக்கின்றனர்.
  • நாட்டில் ராணுவ ஆட்சி அமைய வேண்டும் என 53% கல்லூரி மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
  • வரதட்சணை கொடுப்பதை 36% பெண்களும் 44% கல்லூரி செல்லும் மாணவர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.
  • வீட்டு பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட சலுகைகளைக் கேட்கக் கூடாது என 49% பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
  • பெற்றோர் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்களால் தாங்கள் தண்டிக்கப்படுகிறோம் என 49% பள்ளி மாணவர்கள் கூறுகின்றனர்.
  • வீட்டில் இருக்கும் போது தேர்வை நினைத்து கவலைப்படுவதாக 82% பள்ளி மாணவர்கள் கூறியுள்ளனர்.
  • வகுப்புகளில் தங்களுக்கு தோன்றுகிற கருத்துகளை வெளிப்படுத்த அஞ்சுவதாக 63% பள்ளி மாணவர்கள் கூறுகின்றனர்.
  • பள்ளிகளில் பல்வேறு காரணங்களுக்காக தாங்கள் அடிவாங்கியிருப்பதாக 61% மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
English summary
India is a political democracy, but India’s society is not democratic. That has been a hypothesis offered by many social scientists. Now there is empirical proof–from India’s hope for the future, its school and college students: 65% school children “don’t know” that they are citizens of India 65% of college students disapprove of boys and girls from different religions meeting in public places; 87% of college students “agree” that women have no choice but to accept a certain degree of violence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X