நல்ல செய்தி... வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு!

வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வரும் 4ஆம் தேதி உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளத

Subscribe to Oneindia Tamil

டெல்லி :தென்கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நாளை மறுநாள் உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியிருந்த நாடா புயல் இன்று அதிகாலை காரைக்கால் அருகே கரையை கடந்தது. பெரும் சேதம் எதும் ஏற்படுத்தாமல் இந்த புயல் கரையை கடந்துள்ளது.

நாடா புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலன பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்துக்கு மிதமான மழையும் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.

கடற்காற்று அதிகமாக வீசும் என்பதால் கடல் அதிக சீற்றத்தோடு காணப்படும் என வானிலை மையம் கூறியுள்ளது. எனவே அடுத்த 12 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் படகுகளை எச்சரிக்கையோடு, நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்தம்

நாடா புயலால் எதிர்ப்பார்த்த அளவுக்கு மழை இல்லை என்றாலும் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நாளை மறுநாள் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது.

தனியார் வானிலை மையங்கள் கணிப்பு

அதேநேரத்தில் வரும் சில நாட்களில் வங்கக்கடலில் 2 அல்லது 3 காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாக வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை மையங்கள் கணித்துள்ளன.

வடகிழக்கு பருவமழை

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தங்கள் மற்றும் புயல்களை பொறுத்தே தமிழகத்துக்கு வடகிழக்கு பருவமழை கிடைக்கும்.இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தாமதாமாக தொடங்கியது.

இறுதியில் வடகிழக்குப் பருவமழை

பருவமழையின் இறுதி கட்டம் நெருங்கியுள்ள நிலையில் இதுவரை வங்கக்கடலில் 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள் மட்டுமே உருவாகியிருக்கிறது. இதனால் இந்த ஆண்டு இதுவரை இயல்புக்கும் குறைவான அளவிலேயே வடகிழக்கு பருவமழை பெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Indian Meteorological Centre tells that a new Depression will be formed in the Bay of Bengal. The Indian meteorological Centre also saying that The depression likely formed on 4th of December.
Please Wait while comments are loading...