For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து பணப்பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அவசியம் - ஆர்.பி.ஐ. அறிவிப்பு

வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்ய ஜனவரி 1 முதல் ஆதார் எண் அவசியம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்ய வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ஆதார் எண் அவசியம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டுகள், இணையதள வங்கி சேவைகள், மொபைல் பேங்கிங் உள்ளிட்ட பணப்பரிமாற்றத்திற்கு பின் நம்பர் மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி மக்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சேவைகளுக்கு மாற்றாக ஆதார் எண் மூலம் கைரேகையை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

 Aadhar card mandatory for Cash transaction - RBI

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில், வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் வங்கி பணப்பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளும் ஆதார் வழி மட்டுமே செய்ய முடியும். ஆதார் அடையாளங்களை உறுதி செய்யும் கருவிகளை வங்கிகளில் பொறுத்த வேண்டும்.

ஆன்லைன் பரிவர்த்தனையிலும் ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும். வங்கிகள், வாடிக்கையாளர்கள் இடையிலான கே.ஒய்.சி திட்டத்திற்கு மாற்றாக ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களின் பல்வேறு அட்டை பயன்பாடுகளுக்கு பதிலாக புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை முழுமையாக வங்கி கணக்குகளுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
Aadhar card mandatory for Cash transaction in bank Reserve Bank of India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X