எய்ம்ஸ் பாதுகாவலர்கள் மீது தாக்குதல்- ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி கைது

By:

டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனை பாதுகாவலர்களைத் தாக்கிய புகாரில் டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி இன்று கைது செய்யப்பட்டார்.

டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து கைது செய்யபப்ட்டு வருகின்றனர். டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் இதுவரை 15-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

AAP MLA Somnath Bharti arrested for assaulting AIIMS security staff

மைத்துனி கொடுத்த பாலியல் புகாரில் 2 நாட்களுக்கு முன்னர் அமானாதுல்லா கான் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டு இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இன்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை பார்வையிட சென்ற சோம்நாத் பாரதி அங்கு பாதுகாவலர்களைத் தாக்கி பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தார் என்ற புகாரில் சோம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மனைவியை சரமாரியாகத் தாக்கிய வழக்கில் சோம்நாத் பாரதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பாரதி மீண்டும் பாதுகாவலர்களை தாக்கியதாக சிறைக்கு போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Aam Aadmi Party legislator Somnath Bharti was arrested on Thursday for allegedly assaulting security staff at Delhi’s All India Institute of Medical Sciences earlier this month.
Please Wait while comments are loading...

Videos