For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதெப்படி அதிகாரிகளை கூண்டோடு மாற்றலாம்? திரும்பப் பெற கோரி தேர்தல் ஆணையத்திடம் அதிமுக அவசர மனு!

By Mathi
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் அதிமுகவினர் மனு அளித்துள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலை யொட்டி மாநிலத்தின் நிர்வாகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் புகார்கள் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரனும் நேற்று மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய காவல் ஆணையராக அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த ஜே.கே.திரிபாதியும் மாற்றப்பட்டு, அந்த இடத்தில் தமிழக கடலோரக் காவல்படை கூடுதல் டிஜிபியாக இருந்த சி.சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக புகார் மனு

அதிமுக புகார் மனு

இதனிடையே தம்பிதுரை தலைமையிலான அதிமுக எம்பிக்கள் குழு திருவனந்தபுரத்தில் முகாமிட்டுள்ள தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் இன்று ஒரு மனுவை கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் செய்த பரிந்துரையை ஏற்று பெரிய அளவில் தேர்தல் தொடர்பான மற்றும் தேர்தல் தொடர்பில்லாத அதிகாரிகளை மாற்றம் செய்து இருக்கும் விவகாரத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். வழக்கத்துக்கு மாறான இந்த நடைமுறையால் தேர்தலை சுமுகமாக நடத்துவது என்பது கடினமாகி விடும். தமிழக தேர்தல் தொடர்பான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 22-ந் தேதி வெளியிடப்பட்டதில் இருந்து இதுவரை 9 மாவட்ட கலெக்டர்கள், 7 போலீஸ் சூப்பிரண்டுகள், 5 டி.எஸ்.பி.க்கள் மற்றும் ஒரு டி.ஆர்.ஓ.வை மாற்றம் செய்துள்ளது. இது இவர்கள் தவிர கீழ்மட்ட வருவாய் துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நடைமுறைக்கு எதிரானது

நடைமுறைக்கு எதிரானது

மேலும் முக்கிய பொறுப்புகள் வகிக்கும் மூத்த காவல்துறை அதிகாரிகளை உளவுத்துறை ஐ.ஜி., சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோரும் தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறைக்கு ஒட்டு மொத்த பொறுப்பு வகிக்கும் டி.ஜி.பி. தேர்தல் நடத்தைக்கான அனைத்து பொறுப்புகளையும் பிரித்து கொடுத்துள்ளார். அந்த பணிகள் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் எழவில்லை. இந்த நிலையில் தேர்தலுக்காக தனி டி.ஜி.பி.யை நியமனம் செய்துள்ளனர். இப்படி காவல்துறையில் பெரிய அளவில் மாற்றம் செய்வது தமிழ்நாட்டில் நடைமுறைக்கு எதிரானது.

மாஜி அமைச்சர்களின் பொய் புகார்கள்

மாஜி அமைச்சர்களின் பொய் புகார்கள்

தி.மு.க.வும், காங்கிரஸும் உயர் காவல்துறை அதிகாரிகள் மீது உள்நோக்கத்துடனேயே தேர்தல் ஆணையத்திடம் பொய்யான புகார்களை அளித்தன. அந்த புகார்களை தேர்தல் ஆணையம் உரிய முறையில் விசாரிக்காமல் காவல்துறை அதிகாரிகளையும், கலெக்டர்களையும் மாற்றம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளை மாற்றுவதற்காக பொய்யான புகார்களை அளித்தவர்கள், காங்கிரஸ்-தி.மு.க. இடம்பெற்ற முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அமைச்சர்களாக இருந்தவர்கள். அவர்கள் புகாரால் மாற்றம் நடந்துள்ளது.

2 வாரத்தில் எதுவும் செய்ய முடியாது...

2 வாரத்தில் எதுவும் செய்ய முடியாது...

வலுவான மற்றும் நல்லாட்சி நடந்து வந்த தமிழ்நாட்டில் இப்படி அதிக அளவில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது தேர்தலை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்த உதவாது என்று சுட்டிக்காட்ட நாங்கள் விரும்புகிறோம். தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே இருப்பதால் முக்கிய பொறுப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்களால் தேர்தல் ஏற்பாடுகளை விரைந்து செயலாற்ற இயலாது. அவர்களுக்கு அதற்கு போதுமான கால அவகாசமும் இல்லை. குறிப்பாக சட்டம்-ஒழுங்கு தொடர்பான தேர்தல் நடவடிக்கைகளை விரைந்து செய்ய முடியாது. சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட விரிவான அந்தந்த பகுதி தொடர்பான தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இரு வார கால அவகாசத்தில் அதை பெற இயலாது.

கேபிள் டிவி இயக்குநர் மாற்றம்

கேபிள் டிவி இயக்குநர் மாற்றம்

எதிர்க்கட்சிகளின் தவறான அறிவுரையாலும், தேர்தல் நடவடிக்கைகளை சீர்குலைக்க வேண்டும் என்ற அவர்களது செயலாலும் அதிகாரிகள் மாற்றம் நடந்துள்ளது. தேர்தல் ஆணையரின் நடத்தை விதிகளை தமிழக அரசு கடைபிடிக்கிறது. ஆனால் தேர்தலுக்கு தொடர்பில்லாத அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குனர் போன்றவர்களை மாற்றியிருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். இத்தகைய மாற்றம் நடைமுறையில் இல்லாதது.

ஒரு ஆதாரம் கூட இல்லையே...

ஒரு ஆதாரம் கூட இல்லையே...

அ.தி.மு.க. மீது மக்கள் கொண்டுள்ள நல்லெண்ணத்தை சீர்குலைக்க தி.மு.க.வும், காங்கிரசும் பொய் புகார் மனு அளித்தது. அந்த கட்சிகள் அதிகாரிகளின் பெயர்களைத்தான் கொடுத்ததே தவிர, அந்த அதிகாரிகள் பாரபட்சமாக செயல்பட்டார்கள் என்பதற்கு ஒரு ஆதாரத்தை கூட கொடுக்கவில்லை. அ.தி.மு.க. எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. ஆனால் தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்திருப்பதாக தி.மு.க. தலைவர்கள் வெளிப்படையாகவே கூறினார்கள். அவர்கள் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மீதும் இல்லாத குற்றச்சாட்டுக்களை எல்லாம் நிறைய கூறினார்கள். தி.மு.க.வும், காங்கிரசும் எப்போதும் இத்தகைய தந்திரத்தை கையாள்கிறது.

ஒவ்வொரு தேர்தலிலும்...

ஒவ்வொரு தேர்தலிலும்...

2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போதும், 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போதும் அவர்கள் தேர்தல் அதிகாரிகள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை கூறினார்கள். சமீபத்தில் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடந்தபோதும் அவர்கள் அப்போதைய தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா மீது தவறான குற்றச்சாட்டுக்களை கூறினார்கள். தி.மு.க.வும், காங்கிரஸும் ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் ஆணையத்துக்கு இப்படி தவறான தகவல் கொடுத்து அழுத்தம் ஏற்படுத்தும் போக்கை கடைபிடித்து வருகிறது.

மாற்றங்களை திரும்பப் பெறனும்..

மாற்றங்களை திரும்பப் பெறனும்..

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி நிர்ப்பந்தத்தை ஏற்று அதிகாரிகளை பெரிய அளவில் மாற்றம் செய்திருப்பதால் அது அ.தி.மு.க. மீதும் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி மீதும் தவறான எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது. இது நியாயமற்றது. சுமுகமான தேர்தலுக்கு இது வழி வகுக்காது. எனவே தமிழ்நாட்டில் அதிக அளவில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எதிர்க்கிறோம். மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் தொடர்பான உத்தரவுகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
ADMK has opposed the transfers of many IAS and IPS officials in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X