For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்தியில் மீண்டும் கூட்டணி ஆட்சி சகாப்தம் உருவாகும்: அத்வானி கருத்தால் பரபரப்பு

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மத்தியில் மீண்டும் கூட்டணி அரசு ஏற்படத்தான் வாய்ப்பிருப்பதாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அத்வானி நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நம் நாட்டில் கூட்டணி சகாப்தம் முடிந்து விட்டதாக நான் கூறமாட்டேன். இந்தியா போன்ற மாறுபட்ட தன்மைகள் கொண்ட நாட்டில் மீண்டும் கூட்டணி அரசு அமைய வாய்ப்புள்ளது.

Advani does not rule out return of coalition politics

இந்தியா போன்றதொரு நாட்டில் ஒருவர் அனைத்துச் சூழ்நிலைகளையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, ஒரு கட்சி அரசு இருந்தது. எனினும் அந்த நிலை நீடிக்கவில்லை. வாஜ்பாய் அரசு கூட தனி கட்சி அரசு அல்ல.

வாஜ்பாய் போன்ற தேசபக்தருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டால் அது மிகவும் பொருத்தமாக இருக்கும். நாட்டில் 1975இல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது அது தொடர்பான சட்டப் பிரிவுகளை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிந்திருக்கவில்லை என்று கூறப்படுவதை நான் ஏற்கவில்லை.

இந்திராவின் அரசியல் வாழ்க்கையில் அவசர நிலை என்பது ஒரு கரும்புள்ளி.

இவ்வாறு அத்வானி கூறினார்.

மத்தியில் பாஜக முதன் முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில் மீண்டும் அப்படி ஒரு தனிப்பெரும்பான்மை கிடைக்காது; கூட்டணி ஆட்சியே அமையும் என்ற பொருளில் அத்வானி பேசியிருப்பது பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Senior BJP leader L K Advani did not rule out return of an era of coalition politics in India, saying this was possibile in a country as "diverse and variegated" as it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X