For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய பாஜக அமைச்சரவையில் அதிமுக இணைகிறதாம்.. 2 அமைச்சர் பதவி!

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    துணை முதல்வராகும் ஓபிஸ்?-வீடியோ

    டெல்லி: மத்திய பாஜக அமைச்சரவையில் அதிமுக இணைகிறது. அதிமுகவின் 2 பேருக்கு அமைச்சர் பதவி தரப்பட உள்ளது.

    பீகாரில் திடீர் திருப்பமாக நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுடன் கை கோர்த்தது. இதனைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது என அக்கட்சி செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    ஐக்கிய ஜனதா தளம், அதிமுக

    ஐக்கிய ஜனதா தளம், அதிமுக

    இதையடுத்து மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற உள்ளது. இதேபோல அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்கப்படும்.

    2 அமைச்சர் பதவி

    2 அமைச்சர் பதவி

    அப்படி சேரும்போது அதிமுகவுக்கு 2 அமைச்சர்கள் பதவி தரவும் பாஜக முடிவு செய்துள்ளது. இதனிடையே பாஜகவின் புதிய தேசிய தலைவராக ராம் மாதவ் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

    அமித்ஷாவும் அமைச்சர்?

    அமித்ஷாவும் அமைச்சர்?

    தற்போதைய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விரைவில் மத்திய அமைச்சராகக் கூடும் என கூறப்படுகிறது. இதனால் புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்கிற ஆலோசனை பாஜகவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    யார் யாருக்கு வாய்ப்பு?

    யார் யாருக்கு வாய்ப்பு?

    மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணன் மட்டும் இடம்பெற்றிருக்கிறார். பாஜக ராஜ்யசபா எம்.பி.யான இல. கணேசன், அதிமுகவின் வைத்திலிங்கம், மைத்ரேயன் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    Sources said that AIADMK likely will become part of NDA government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X