For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓராண்டு தடையுடன் தப்பித்தார் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: ஆசிய போட்டியில் பதக்கத்தைப் பெற மறுத்த குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி ஒரு ஆண்டு போட்டிகளில் பங்கேற்க அகில இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் தடை விதித்துள்ளது.

தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டி அரையிறுதிச் சுற்றில் சரிதா தேவி ஆதிக்கம் செலுத்திய போதிலும், அவரை எதிர்த்து மோதிய தென் கொரியாவின் ஜினா வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.

AIBA bans Sarita Devi for one year

போட்டியின் போது விதிகளுக்கு புறம்பாக சரிதா தேவி குத்துவிட்டதாகக் கூறி, ஜினா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சரிதா தேவி வென்ற வெண்கலப் பதக்கத்தை அவருக்கு அணிவிக்க போட்டி அமைப்பாளர்கள் வந்தபோது அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

மாறாக பதக்கத்தை கையில் வாங்கிக் கொண்ட சரிதா தேவி, அரையிறுதியில் தன்னை தோற்கடித்த தென்கொரியாவின் ஜினா பார்க்கின் கழுத்தில் திடீரென அதனை அணிவித்தார். இதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அவர் தம்முடைய செயலுக்காக வருத்தம் தெரிவித்து குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் சரிதா தேவியை இடை நீக்கம்செய்து உத்தரவிட்டு இருந்தது. தற்போது அவரை ஒரு ஆண்டுக்கு போட்டிகளில் பங்கேற்க கூடது என தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சரிதா தேவிக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படலாம் என்ற பேச்சு இருந்தது. சரிதா தேவிக்கு ஆதரவாக சச்சின் டெண்டுல்கர் களம் இறங்கினார். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதினார். மத்திய விளையாட்டுத் துறையும் சரிதா தேவி விவகாரத்தில் தீவிரம் காட்டிது. இந்த நிலையில் சரிதா தேவிக்கு ஒரு ஆண்டு தடை மட்டுமே என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Boxer Sarita Devi on Wednesday was handed a one-year ban by International Boxing Federation (AIBA) for refusing to accept her bronze medal at the 2014 Asian Games.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X