For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு டிவிட்டரில் குவியும் கண்டனங்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்காக 3 பயணிகளை ஏர் இந்தியா விமான ஊழியர்கள், விமானத்தை விட்டுக் கீழே இறக்கியதற்கு மக்கள் சமூக வலைதளங்களில் கண்டனங்களைக் குவித்து வருகின்றனர்.

லே நகரிலிருந்து டெல்லி வரும் ஏர் இந்தியா விமானத்தில் இந்த சம்பவம் நடந்தது. அமைச்சர் மற்றும் அவரது உதவியாளர் வருவதற்காக விமானத்தை தாமதம் செய்ததோடு, அமைச்சரும், உதவியாளரும் பயணிப்பதற்காக 3 பயணிகளையும் கீழே இறக்கி விட்டுள்ளனர் ஏர் இந்தியா ஊழியர்கள். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Air India trolled on Twitter over Kiren Rijiju controversy

ஜூன் 24ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை ரிஜிஜு மறுத்துள்ளார் என்ற போதிலும் சம்பவம் நடந்தது உண்மை என்று தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அமைச்சரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து டிவிட்டரில் காணப்பட்ட சில கருத்துக்கள்:

உதயன் மிட்டர் - உதயன் மிட்டர் என்பவர் கூறியுள்ள கருத்தில், அனைவரும் சமம், ஆனால் சிலர் மற்றவர்களை விட ரொம்பச் சமம் என்ற புது மொழியை ஏர் இந்தியா கடைப்பிடிக்க வேண்டும் என்று கிண்டலடித்துள்ளார்.

எச்கே என்பவர் போட்டுள்ள டிவிட்டில், எனது நண்பர் அந்த விமானத்தில்தான் பயணித்தார் என்று விமர்சித்துள்ளார்.

சச்சின் கெளசிக் - சச்சின் கெளசிக் டிவிட்டில், அவமானம் என்று கண்டித்துள்ளார்.

ஆசிஷ் என்ற பத்திரிகையாளர் வெளியிட்டுள்ள டிவிட்டில், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.

ஐஏம் கவர் என்பவர் போட்டுள்ள டிவிட்டில், சாதாரண மக்களை கீழே இறக்கி விட்ட செயல் ஏமாற்றத்தைத் தருகிறது. இது அவமானகரமானது என்று வர்ணித்துள்ளார்.

English summary
Union Minister Kiren Rijiju landed in a new controversy following reports that one Air India flight got delayed for him. It has been reported that the flight from Leh to Delhi got delayed by one hour and three passengers were offloaded just to accommodate the minister and his PA. Meanwhile, micro-blogging site Twitter has been flooded with comments on Air India and Rijiju. Here are a few tweets on the minister and the airline:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X