For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தயாநிதி, கலாநிதி மாறன் ஜாமீன் மனு மீதான விசாரணை டிச.22-க்கு ஒத்திவைப்பு

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி இந்த விசாரணையை ஒத

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் டிவி குழும தலைவர் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது..

ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு முறைகேடாக விற்பனை செய்தது; இதில் சன் டிவி குழுமம் ஆதாயமடைந்தது தொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Aircel Maxis deal case adjourns to Dec. 22

இவ்வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதி ஓபி ஷைனி இதை விசாரித்து வருகிறார்.

இவ்வழக்கில் ஏர்செல் நிறுவனத்தின் சொத்துகளையும் சேர்க்க வேண்டும் என்று புதியதாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே இவ்வழக்கில் ஜாமீன் கோரி தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்தனர்.

இம்மனு மீதான விசாரணை வரும் வரும் 22-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி ஓபி ஷைனி இன்று தெரிவித்தார்.

English summary
Hearing against Dayanidhi Maran and Kalanithi Maran in Aircel Maxis deal matter deferred till December 22
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X