For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சார்லி ஹெப்டோ எடிட்டர் பெயரை கிராஸ் செய்து விட்டு புதிய ஹிட் லிஸ்ட் வெளியிட்ட அல் கொய்தா!

Google Oneindia Tamil News

டெல்லி: அல் கொய்தா தீவிரவாத அமைப்பு புதிய ஹிட் லிஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த சார்லி ஹெப்டோ பத்திரிகையின் ஆசிரியர் பெயர் படத்தை கிராஸ் செய்து விட்டு வெளியிட்டுள்ளது அல் கொய்தா.

இந்த புதிய ஹிட் லிஸ்ட் தற்போது டிவிட்டரில் வலம் வந்து கொண்டுள்ளது. இந்தப் பட்டியலில் பல்வேறு தலைவர்கள், பிரமுகர்களி் படங்களும், பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அதில் பிரான்சின் பாரீஸ் நகரில் நேற்று தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சார்லி ஹெப்டோ இதழின் ஆசிரியர் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஆனால் அவரது படத்தின் மேலே குறுக்குக் கோடு போட்டு வெளியிட்டுள்ளது அல் கொய்தா.

Al-Qaeda re-releases hit list with slain Charlie Hebdo editor struck out

2013ல் முதல் பட்டியல்

முதல் முதலில் கடந்த 2013ம் ஆண்டு ஒரு ஹிட் லிஸ்ட்டை வெளியிட்டது அல் கொய்தா. அதில் பலருடைய படங்கள் இடம் பெற்றிருந்தன. அந்தப் பட்டியல் அடங்கிய லிஸ்ட், இன்ஸ்பயர் என்ற ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்டது. இந்த இன்ஸ்பயர் பத்திரிகையானது அல் கொய்தாவே நடத்தி வந்த பத்திரிக்கையாகும்.

அதில் சல்மான் ருஷ்டி, டென்மார்க் கார்ட்டூனிஸ்ட் குர்த் வெஸ்டர்கார்ட், பத்திரிகையாளர் பிளம்மிங் ரோஸ், டென்மார்க் அரசியல்வாதி கீர்த் வில்டர்ஸ், ஸ்வீடன் கார்ட்டூனிஸ்டுகள் லால்ஸ் வில்க்ஸ், ஸ்டீபன் சார்போனியர், டென்மார்க் பத்திரிகையாளர் மற்றும் முன்னாள் ஜிலின்ட்ஸ் போஸ்ட் எடிட்டர் கார்ஸ்டன் லஸ்ட், அமெரிக்க பா்திரியார் டெர்ரி ஜோன்ஸ், மோரிஸ் ஸ்வாதிக், அயான் ஹிர்ட்ஸ் அலி, மோலி நோரிஸ் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

அல்கொய்தாவின் திட்டம்

தற்போது உலக அளவில் மிகப் பெரிய தீவிரவாத அமைப்பாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு உருவெடுத்து விட்டது. தீவிரவாத கருத்து கொண்ட அனைவரும் இந்த இயக்கத்தின் பக்கம்தான் சாய்ந்து வருகின்றனர். இதனால் அல் கொய்தா கிட்டத்தட்ட செயலிழந்து போயுள்ளது. எனவே தனது பெயரை வலுப்படுத்த வேண்டிய நிலையில் அது உள்ளது.

எனவேதான் பிரான்சிஸ் நடந்த தீவிரவாதத் தாக்குதலைப் பயன்படுத்தி தனது ஹிட் லிஸ்ட்டை அது மீண்டும் வெளியிட்டுள்ளதாக கருதப்படுகிறது. இதன் மூலம் தான் இன்னும் போட்டியில் இருப்பதாக அது காட்டிக் கொள்ள முனைவதாகவும் தெரிகிறது.

இதை அல் கொய்தா நடத்தியிருந்தால்

பாரீஸ் தாக்குதலை அல் கொய்தா நடத்தியிருந்தால், நிச்சயம் அது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தும், அல் கொய்தா குறித்த உலக மக்களின் கவனம் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The chilling hit list of the Al-Qaeda which had appeared on their magazine Inspire has resurfaced on twitter, but this time it is with one name less. The photographs of the persons on their hitlist has been reposted with the name of slain Charlie Hebdo editor with a red X or cross mark against it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X