For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜனவரி 30-ம் தேதி தியாகிகள் தினம்: நாடு முழுவதும் 2 நிமிட மவுனம் கட்டாயம் - மத்திய அரசு

ஜனவரி 30 -ம் தேதி நாடு முழுவதும் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட உள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: ஜனவரி 30 ஆம் தேதி தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் 2 நிமிடம் மவுனத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய நாட்டின் விடுதலைக்காக அயராது பாடுபட்டு, இன்னுயிரை ஈந்த, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக தேசத்தந்தை மகாத்மா காந்தியின் மறைந்த நாள் ( ஜன.30) தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

All Indians will have to maintain 2 minutes silence on January 30

நாடு சுதந்திரம் பெற்றதில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. 1948 ஜன.30ம் தேதி காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவின் துக்க நாளாக இது அமைந்தது. அவரது தியாகத்தையும், சேவையையும் நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ம் தேதி தியாகிகள் நினைவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

அன்றைய தினம் டெல்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தி சமாதியில் குடியரசுத் தலைவர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதன்படி வரும் ஜனவரி 30ம் தேதி முற்பகல் 11 மணி முதல் 11.02 மணி வரை அனைவரும் மவுனம் அனுசரிக்க வேண்டும் என மத்திய அரசு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

English summary
All Indians will have to maintain 2 minutes silence on January 30 at 11 am. The Home Ministry issued the order directing all states to implement the same compulsorily.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X