For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிராமங்களுக்கும் பிராண்ட் பேண்ட்... டிஜிட்டல் இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தகவல் தொழில்நுட்பத் துறையின் பயன்கள் அனைத்து குடிமக்களையும் சென்றடையவும் இத்துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மத்திய அரசு நடைமுறைப்படுத்த இருக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மத்திய பிரதேசத்தின் 2 ஊராட்சிகளில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்று டிஜிட்டல் இந்தியா திட்டம். அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் அதிவேக பிராட்பேண்ட் இண்டர்நெட் வசதி, நாட்டின் குடிமக்களின் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பது, தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடுகளை ஈர்ப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களைக் கொண்டது 'டிஜிட்டல் இந்தியா' திட்டம்.

நாடு முழுவதும் 36 மாநிலங்களிலும் 600 மாவட்டங்களிலும் 'டிஜிட்டல் இந்தியா' திட்டம் தொடர்பான நிகழ்ச்சிகள் இன்று நடத்தப்பட்டன.

இந்த டிஜிட்டல் திட்டத்தால் என்ன பயன்கள்?

  • குக்கிராமங்களுக்கு பிராட்பேண்ட இணைய இணைப்பு வசதி ஏற்படுத்தி தரப்படும்.
  • இத் திட்டத்தின் கீழ் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.
  • அனைத்து அரசு துறைகளும் டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைக்கப்படும்.

  • அரசின் சேவைகள் முழுவதும் இணையதளம் வாயிலாக வழங்கப்படும் பள்ளி மாணவர்கள் தங்கள் பாடநூல்களை டிஜிட்டல் முறையில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
  • இப்படி டவுன்லோடு செய்யும் புத்தகங்களை ஸ்மார்ட் ஃபோன், டேப்லெட், மடிக்கணிணி ஆகியவற்றில் 'சேவ்' செய்து கொள்ளவும் முடியும்.
  • பாடங்களுக்கான ஆடியோ ஃபைல்கள், பிராக்டிகல் தேர்வுகளுக்கான வீடியோக்களையும் இலவசமாக டவுன்லோடு செய்யலாம்
  • டிஜி லாக்கர் எனப்படும் ஆவண சேமிப்பு சேவையின் மூலம் தனிநபர்கள் தங்களது பள்ளிச் சான்றிதழ், இடமாற்ற சான்றிதழ், ஓட்டுனர் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை டிஜி லாக்கர் வெப்சைட்டில் இலவசமாக சேமித்து வைக்கலாம்.

  • டிஜி லாக்கர் சேவையை பயன்படுத்த ஆதார் எண் மற்றும் செல்போன் எண் அவசியம்.
  • இதேபோல் இ எஜூகேசன், இ ஹெல்த், இ சைன் என பல சேவைகள் அறிமுகம் செய்யப்படும்.
  • செல்போன்கள் மூலம் அனைத்து அரசுத்துறைகளையும் எளிதில் அணுக வழிவகை செய்யப்படும் இதற்காக " digital India Portal, MyGov Mobile App, Swachh Bharat Mission App, Aadhaar Mobile Update App" ஆகிய ஆப்கள் வெளியிடப்படும்.
  • இத் திட்டத்தின் கீழ் பல கோடி டாலர் மதிப்பிலான முதலீடுகளை ஈர்ப்பது.
  • இதனால் தகவல் தொழில்நுட்பத் துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

  • 4 லட்சம் இணைய இணைப்பு மையங்கள் உருவாக்கப்படும். 2.5 லட்சம் கல்வி நிறுவனங்களுக்கு வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.

இத்தகைய திட்டத்தை இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை தொடங்கி வைத்தார். மத்திய பிரதேசத்தின் 2 ஊராட்சிகளில் இந்தத் திட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இன்றைய தொடக்க விழாவில் ஏர் பஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட்டர் கட்ஸ்மைடல், ரிலையன்ஸ் இந்தியா தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் அனில் அம்பானி, டாட்டா குழுமங்களின் தலைவர் சைரஸ் மிஸ்திரி, பார்தி குழுமங்களின் தலைவர் சுனில் பார்தி மிட்டல், விப்ரோ குழுமங்களின் தலைவர் அஜிம் பிரேம்ஜி, ஸ்டெர்லைட் குழுமங்களின் தலைவர் அனில் அகர்வால், ஆதித்யா பிர்லா குழுமங்களின் தலைவர் குமாரமங்கலம் பிர்லா உள்ளிட்ட பிரபல தொழிலதிபர்கள் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

English summary
In an order to create participative, transparent and responsive government, Prime Minister Narendra Modi will launch the much ambitious 'Digital India' programme on Wednesday, July 1 in the national capital at 4 pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X